Shakthi Shri K B

Drama Classics Fantasy

4  

Shakthi Shri K B

Drama Classics Fantasy

சிரிப்பு மத்தாப்பூ தீபாவளி!!

சிரிப்பு மத்தாப்பூ தீபாவளி!!

2 mins
529


அவர்கள் இந்த வருடுமாவது வருவார்களா? என்ற சிந்தையுடன் அமர்த்தித்திருந்தால் சிவகாமி அம்மாள். காலங்கள் ஓடிவிட்டன. பெரியய்யாவுடன் திருமணமாகி வந்து இந்த வீட்டிற்கு அம்பத்தியெட்டு வருடங்கள் ஆகிறது. காலம் மாறினாலும் இங்கு கொண்டாடும் பண்டிகைகள் மாறுவதில்லை என எண்ணிய வாறு தன்னை யாரோ கூப்பிடுவதை உணர்ந்தாள் சிவகாமி.

வருகிறேன், வந்துகொண்டேயிருக்கிறேன். என்னங்க என்ன வேணும்."சிவகாமி, அந்த அலைபேசியில் நம் மூன்றாவது மகன் குகனுக்கு ஒரு அழைப்பு விடுமா. பேசி நிறைய நாட்கள் ஆகின்றது " என்றார் பெரியய்யா.

எங்க என்ன கேட்குறீங்க, இப்போ அங்க மணி இரவு இரண்டு இருக்கும் இந்த நேரத்தில் எப்படி அழைப்புவிடுவது என்றாள் சிவகாமி.

"ஓ, மறந்துவிட்டேன்", விடு அவனாக அழைக்கும் பொது பேசலாம், என்ற படி சுவற்றில் இருந்த வண்ண புகைப்படத்தை பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரித்தார்.

சிவகாமிக்கும் பெரியய்யாவுக்கும் மொத்தம் நான்கு குழந்தைகள். பெரியவன் குமார், மென்பொருள் நிபுணர், மனைவி இரு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறார் . அடுத்தது கதிர் பொறியாளர் பாரிஸ் நகரத்துவாசியாகி பல வருடங்கள் அகிறது. அவருக்கு இரு மகன்கள், மனைவி பேராசிரியை அனைவரும் பாரிஸில் வாழ்கின்றனர். மூன்றாவது மகன் கண்ணன் அவனும் அவன் மனைவி மூன்று குழந்தைகளுடன் லண்டனில் வசிகிறான்.

கடைக்குட்டி என செல்லமாக அவர்களில் மகள் கவிதா ஒரு பல் மருத்துவர், அவரும் குடுமத்துடன் நெதர்லாந்தில் வசிகிறார்.

இப்படி நான்கு பெரும் வேறு நாட்டில் வாழ்கின்றனர். மூன்று வருடத்திற்கு ஒரு முறை இங்கு அவர்களில் பூர்விக கிராமத்திற்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பெருந்தொற்று காரணமாக யாரும் இங்கு வரவில்லை.

குழந்தைகள், பேரக்குழந்தைகள் என அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சிவகாமிக்கு உண்டு.

திடீரென கதவு தட்டும் சப்தம் கேட்க தொடங்கியது, சென்று பார்த்தால் சிவகாமியின் மொத்த குடும்பம் திரண்டு வந்துள்ளது. சிவகாமிக்கு அளவில்லா மகிழ்ச்சி, அனந்த கண்ணீர் ஒட என செய்வது என அறியாமல் திகைத்து போனாள். 

"அம்மா, சிவகாமி குடிக்க தண்ணீர் கொண்டுவா, எழுந்திரு அம்மா" என, பெரியய்யாவின் குரல். கண்களை திறந்து பார்த்தால் சிவகாமி,புரிந்தது அவள் கண்டது கனவு என. அட இந்த கனவு நிறைவேறினால் என்னை விட மகிழ்ச்சி அடைவர் யாரேனும் உண்டோ என எண்ணியபடி தன் காலை வேலைகளை செய்ய துடங்கினாள்.


தீபாவளி திருநாளுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ளது வேக வேகமாக பண்டிகை பணிகளை அக்கம் பக்கத்துக்கு விட்டர்கள் செய்வதை பார்த்து மனம் ஏங்கினாள் சிவகாமி.

அலைபேசி ஒலித்தது."அம்மா, நான் கவிதா, என செய்கிறாய் ". ஒண்ணுமில்லை ட சும்மா அமர்த்திருகிறேன் என்றால் சிவகாமி. என்ன பண்டிகைக்கு தயாராகவில்லையா? என்னமா இரண்டு முதியவர்கள் நாங்கள் என்ன பலகாரம் சாப்பிடுவோம் என பண்டிகை வேலையா என ஒன்னும் இல்லை.

அப்படியா, கொஞ்சம் வெளியே வ,வ, சொலிகிறேன், என புதிர் போட்டாள் கவிதா.

கதவை திறந்தாள் சிவகாமி, "அவள் முகமே பேசுகிறது சந்தோசத்தில். அவளில் அனைத்து குழந்தைகளும் பெற குழுந்தைகைளும், மருமகன், மருமகள்கள் என தன் மொத்த குடும்பமும் தீபாவளி பண்டிகையை கொண்டடா திரண்டு வந்துள்ளனர்.


இப்படி பட்ட தீபாவளி பண்டிகையை தானே நான் எதிர்பார்த்து காத்திருந்தேன் என்றார் சிவகாமியின் பின்னாலிருந்து பெரியய்யா. அனைவரும் சிரித்தனர், அஹ்ஹா, இது தானே சிரிப்பு மத்தாப்பூ தீபாவளி!!


Rate this content
Log in

Similar tamil story from Drama