STORYMIRROR

Saravanan P

Drama Romance Tragedy

5  

Saravanan P

Drama Romance Tragedy

சேரா காதல்:சந்தித்தால்?

சேரா காதல்:சந்தித்தால்?

2 mins
426

கருப்புசாமி மற்றும் ஷோபா அன்று கல்லூரியின் உணவு கடையில் இருந்து ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.


திரும்ப எப்போ ஊருக்கு போற? என ஷோபா கேட்க,நாளைக்கு ஷோபா ரிவ்யூ முடிச்சிட்டு,நீ ஷோபா? என கேட்டு விட்டு அவளது கையில் இருந்து ஜூஸ் பாட்டிலை வாங்கி திறந்து அவளிடம் கொடுத்தான்.


ஷோபா ஆச்சரியமாக கருப்புசாமியை பார்த்து எப்படி டா? என கேட்க,உன்னை பத்தி தான் எனக்கு தெரியுமே! நீ என்னைக்கு எனக்கு இந்த ஹெல்ப் வேணும்னு கேட்டிருக்க என சொல்லி விட்டு ஸ்நாக்ஸ் பாக்கெட்டை அவளிடம் நீட்டினான்.


ஷோபா அவனை கட்டியணைத்து கொண்டு "பயமா இருக்கு டா,நாம ரொம்ப வருஷம் கழிச்சு இதே மாதிரி காதலோட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு நடப்போமானு?" என சொல்லி விட்டு தேம்ப ஆரம்பித்தாள்.


இல்லைனா என்ன? என கருப்பு கேட்டு விட்டு சாப்பிட ஆரம்பிக்க அவனது கையை திருகி விட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் ஷோபா.


ஷோபா நீ வெளிப்படையா உன் பயத்தை காட்றா ஆனால் என் மனசுக்குள்ள அது இருக்கு,வெளியில அது தெரியாது என சொல்லிவிட்டு வந்த கண்ணீரை அடக்கி கொண்டு சிறிதாக சிரித்தான்.


ஷோபா முகத்தை திருப்பி அவனது கையை இருக பற்றினாள்.


3 வருடம்,1 வாரம் முன்,


ஷோபா வகுப்பறையில் அமர்ந்து தனது ரெக்கார்ட்டை எழுதி கொண்டிருந்தாள்.


அப்பொழுது வகுப்பிற்குள் யாரோ ஒருவர் வருவதை கண்டு எழுந்து அவள் தலையை திருப்பி பார்க்க கருப்புசாமி மெதுவாக நடந்து வந்தான்.


இருவரும் அந்த வகுப்பில் ஒரு விஷயத்தில் ஒத்துப்போயினர், இருவரும் தனிமை விரும்பிகள்,நட்பு வட்டத்தில் ஒரு அளவுடன் இருப்பார்கள்.


இவர்கள் இருவரும் சிறிது சிறிதாக பேச ஆரம்பித்து மூன்றாவது வருடத்தில் ஒன்றாக பிளேஸ்மென்ட்க்காக நண்பர்களாக படிக்க ஆரம்பித்து காதலர்களாக மாறினர்.


ஆனால் இரு அமைதி மனங்களும் இரண்டு நாட்களில் முதலில் ஒருவர் பிறகு இன்னொருவர் என காதலை கூறினர்.


இருவரும் பிளேஸ்மென்டில் கஷ்டப்பட்டாலும் இறுதியில் இருவரும் 2 மாத இடைவேளையில் ஒருவர் பின் ஒருவர் வேலைக்கு சேர்ந்தனர்.


இருவரும் ஒருவரின் பிரச்சனைக்கு ஒருவர் துணையாக இருந்தனர்.


ஆனால் கல்லூரில் அவர்களின் இறுதி வருட நாட்கள் நெருங்க நெருங்க தங்கள் வீட்டில் தங்கள் காதலை சொல்வதை நினைத்து இருவருக்கும் பயம் வந்ததது.


ஏன் என்றால் இருவரின் வீட்டிலும் காதல் என்றால் சுத்தமாக பிடிக்காது.


இப்பொழுது,


கருப்புசாமி மற்றும் ஷோபா பிரியாவிடை கொடுத்து கல்லூரியை விட்டு கிளம்பினர்.


5 வருடங்கள் கழித்து,


கருப்புசாமி தன் பையனை கூப்பிட்டு கொண்டு கல்லூரியில் ரீயூனியனுக்கு சென்றிருந்தான்.


அதே நேரத்தில் ஷோபா அவளது கணவன்‌ மற்றும் குழந்தையுடன் வந்திருந்தாள்.


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இன்னொருவர் மனம் வருத்தம் அடைய கூடாது என நினைத்து கொண்டு அன்று ரியூனியன் முடித்து கிளம்பினர்.


வீட்டிற்கு வந்த கருப்புசாமி அவனது மனைவி ஆபிஸில் இருந்து வந்து சோர்வாக அமர்ந்திருப்பதை கண்டு பையனை விட்டு விட்டு கை,கால்,முகம் கழுவி விட்டு அவளுக்கு தேநீர் போட்டு எடுத்து வந்தான்.


ரியூனியன் எப்படி போச்சு? என மனைவி கேட்க நல்லா போச்சு என தயங்கி கொண்டே சொன்னான் கருப்புசாமி.


அவங்களை பார்த்தீங்களா? என மனைவி கேட்க,இல்லை மா பார்க்க கூடாது அப்படினு முடிவெடுத்து அவளை பார்க்கவோ பேசவோ இல்லை என தலை குனிந்தபடி சொன்னான்.


நீங்க அவங்க கிட்ட மனசார பேசிருந்தா நான் ரொம்ப சந்தோஷபட்டிருப்பேன் என சொல்லிட்டு டம்ளரை விளக்க போட சென்றாள்.



Rate this content
Log in

Similar tamil story from Drama