அவ்விடம் எங்கள் வீடு
அவ்விடம் எங்கள் வீடு
கவின் அவன் மனைவி அம்ஷா மற்றும் குழந்தை அபிநயா தில்லையார் நகரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
கவின் ஒரு தெருவில் வண்டியை நிறுத்தி விட்டு அங்கு இருந்த ஒரு இடத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.
அம்ஷா அவன் தோளில் கை வைத்து என்ன என தலையால் கேட்டாள்.
கவின் அவள் கையில் இருந்த தன் குழந்தை தூங்கி இருப்பதை பார்த்து சிரித்துக்கொண்டே வண்டியை மருத்துவமனை நோக்கி செலுத்தினான்.
அவன் அந்த இடத்தில் கண்டது அவன் சிறு வயதில் இருந்த ஓட்டு வீடும்,அதை சுற்றி இருந்த மரங்கள்,அவனுடைய சிறுவயது நினைவுகள்.
ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை எடை நன்றாக உள்ளது என்றும் தண்ணீர் சற்று நிறைய குடிக்க வைக்க வேண்டும் என கூறிவிட்டு அடுத்து என தன் டேபிளில் இருந்த பெல்லை அழுத்தினார்.
அந்த மருத்துவர் 100 ரூபாய் மட்டுமே வாங்கினார் தற்பொழுது பீஸ் ஆக.
கவின் அபிநயாவை தோளில் போட்டு தட்டிக் கொடுத்து தூங்க வைங்க,அம்ஷா பீஸ் கொடுத்து விட்டு மருந்து வாங்க மெடிக்கலஸ் சென்றாள்.
அங்கிருந்து கிளம்பிய மூவரும் மீண்டும் அந்த இடத்திற்கு வந்தனர்.
கவின் சிரித்தப்படி பேச ஆரம்பித்தான்.
"என் சின்ன வயசு ஞாபகம் இந்த இடம்,அம்மா அப்பா நான் இரண்டு அண்ணா அப்பறம் அக்கா எல்லாரும் இங்க ஒரு சின்ன ஓட்டு வீட்டில இருந்தோம்.
மழை பெஞ்சா ஒழுகும்,ஆளுக்கொரு பாத்திரம் எடுத்துட்டு ஒழுகுற இடம் பார்த்து ஓடி போய் வச்சிட்டு இருப்போம்.
அம்மா ஒரு சின்ன இடத்துல சமைக்கும்.
நான் படிச்ச ஸூகுல் இதோ இங்கிருந்து மெயின் ரோட்ல கால் மணி நேரம்.
நாங்க எல்லாரும் ரொம்ப நாள் ஒன்னா இருந்த இடம்.
அப்பறம் அண்ணா வீடு வேற இடத்துல வாங்குனர்.
அங்க எல்லாரும் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு வேலை பார்க்க ஆரம்பிச்சோம்.
எங்க சின்ன கடையில கொஞ்சம் பெரிசு பண்ணோம்.
வாழ்க்கை அப்படியே மாறிருச்சு."
அவர்கள நின்று பேசிய இடத்தில் அந்த பழைய ஓட்டு வீடு இல்லை.
அங்கு பெரிது பெரிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தது.
மரங்கள் நிறைந்த இருந்த அந்த இடத்தில் தற்பொழுது இரண்டு மரங்கள் மட்டுமே இருந்தது.
அபிநயா அழ ஆரம்பிக்க மீண்டும் தன் தோளில் போட்டு சமாதானபடுத்திவிட்டு அம்ஷாவிடம் கொடுத்து விட்டு மூவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினர்.
