அதிர்ஷ்டத்தை தேடி
அதிர்ஷ்டத்தை தேடி
விமலன் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன்.படிக்க வசதி இல்லை.இருந்தாலும் இப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படிக்க சுத்தமா வசதி கிடையாது.
ஆனால் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு கருவியை கண்டு பிடித்து அதற்கு பாராட்டும் ஒரு சிறிய பரிசும் பெறுவான்.
அந்த ஆண்டு இரண்டு பழைய சைக்கிள் பாகங்களை சேர்த்து ஒரு நான்கு சக்கர வாகனத்தை தயார் செய்தான்.நடுவில் அமர்ந்து சைக்கிள் மிதிப்பது போல இரண்டு பெடல்களை மிதித்து சைக்கிளை விட வேகமாக செல்லும் ஒரு வாகனத்தை தயார் செய்தான்.அதற்கு முதல் பரிசும்,அதை பாராட்டி ஒரு பத்திரிகையில் பேட்டியும் எடுத்தார்கள்.அந்த வாகனம்,கால் ஊனம்உள்ளவர்கள்,பெண்கள்,வயதானவர்கள் என்று பலரும் எளிதில் பயன் படுத்தும் விதத்தில் தயார் செய்து இருந்தான்.
இந்த செய்தியை பார்த்த ஒரு சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் அதை
வியாபார நோக்குடன் தயாரிக்க அவனிடம் இருந்து உரிமையை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி ஒரு பெரும் தொகை முன் பணம் கொடுக்க தயார் ஆனாது.கூடவே கல்லூரியில் படிக்கும் செலவையும்,படிப்பு முடிந்த பிறகு அந்த நிறுவனத்தில் நல்ல ஊதியம் கொடுத்து வேலை தரவும் சம்மதித்து
அவனிடம் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க,அவனும் அதை ஏற்று கொண்டு வந்த அதிர்ஷ்டத்தை விட கூடாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு,இன்று அவன் மிகவும் வளர்ந்து வசதியாக இருக்கிறான்.இப்போது அந்த நிறுவனத்தின் துணை தலைவர் பதவியை பெற்று சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறான்.
