Harini Ganga Ashok

Crime


4  

Harini Ganga Ashok

Crime


அருந்ததி

அருந்ததி

1 min 125 1 min 125

வாழ்க்கை ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு புது வாய்ப்பை அளிக்கிறது. நாமும் அதை புதிய முயற்சியில் ஈடுபடுத்தி கொள்வோமே...


அருந்ததி என்னும் கதாபாத்திரத்தை நம்மால் என்றும் மறக்க இயலாது. அருந்ததியை வேறொரு பரிமாணத்தில் உங்கள் முன் கொண்டுவந்துள்ளேன்.


அருந்ததி தனசேகர் செல்வியின் ஒற்றை மகள். தனசேகர் அந்த ஊரின் ஜமீன்தார் வீட்டில் கணக்காளராக பணியாற்றுபவர். அருந்ததி சிறுவயதில் இருந்தே படுசுட்டி. அனைத்தும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். கடவுளிடம் அதனை இஷ்டம் அவளுக்கு. தெய்வத்தின் குழந்தையாகவே ஊர் மக்களால் கூறப்பட்டாள்.


ஒருமுறை தந்தையுடன் ஜமீன்தார் வீட்டிற்கு சென்றபொழுது அங்கு எதோ தப்பு நடப்பதாக உணர்ந்தாள். அங்குள்ள மனிதர்கள் பேச்சுகள் நடவடிக்கைகள் என அனைத்தும் அவளுக்கு தவறாகவே பட்டது. தன் தந்தையிடம் கேட்டபோது அது அப்படி தான் அதை பற்றி எல்லாம் கேள்விகேட்க கூடாது என்று சொல்லிவிட்டார். இதை செய்ய கூடாது என்று சொல்கிறார்களோ அதைத்தானே மனம் செய்ய எண்ணும்.


தந்தையுடன் ஜமீன்தார் வீட்டுக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள். அதன் விளைவைவாக அவளுக்கு விஷயம் சற்று பிடிபட்டது. அம்மன் கோவிலில் நகை திருடப்பட்டிருக்கிறது மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை அன்று உயிர்பலி கொடுப்பதாகவும் தெரிந்துகொண்டாள். இது எதும் ஊர்மக்களின் பார்வைக்கு வராமலே நடந்து கொண்டிருந்திருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.


சனிக்கிழமை ஊரடங்கியபின் ஜமீன்தார் அவரின் ஆட்களை கூட்டி கொண்டு கோவிலுக்கு புறப்படுவதை உறுதி செய்துகொண்டு அருந்ததி ஊர்மக்களை ஒன்று திரட்டி இன்று கோவிலில் எதோ அதிசயம் நிகழப்போவதாக ஜமீன்தார் உரைத்ததாக சொல்லி அவர்களை கூட்டி சென்றாள்.


அங்கு பலிபூஜையில் இருந்த ஜமீன்தார் மற்றும் அவரின் ஆட்கள் அவர்களை அந்நேரத்தில் எதிர்பார்க்கவில்லை. கையும் களவுமாக ஊர்மக்களிடம் மாட்டிக்கொண்டார் ஜமீன்தார். ஊர்மக்கள் அவர்களுக்கு சரியான படம் கற்பித்தனர்.


நம்பிக்கை மிகவும் சக்திவாய்ந்தது. வாழ்வாதாரத்தின் அடிப்படையே நம்பிக்கை தான். காலையில் நமக்கு பால் கொண்டுவரும் பால்காரன் முதல் இரவில் கூர்க்கா வரை ஒவ்வொருவரையும் நம்பி தான் நம் நம்முடைய அன்றாட வாழ்வை வாழ்கிறோம். நாம் ஒருத்தர் மற்றொருவரிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும். மற்றவர்களின் நம்பிக்கையை உடைத்தலாகாது.

தவறு என தெரிந்தால் துணிந்து எதிர்த்திடுங்கள். சிந்தித்து செயலாற்றுங்கள்.


Rate this content
Log in

More tamil story from Harini Ganga Ashok

Similar tamil story from Crime