அறிவுள்ள ஜீவன்
அறிவுள்ள ஜீவன்
கருப்பன்அந்த நாட்டு நாயின் பெயர்.
நிறமும் அது தான்.எப்போதும்
மணியின் வீட்டு வாசலில் அது காத்து கிடக்கும்.
மணியின் மனைவி சுமதிக்கு அது ஒரு பிள்ளை.அவள் எங்கு சென்றாலும் கூட பின்னாடியே செல்லும்.
மணி மாலை நேரம் மது கடைக்கு செல்வது வழக்கம்.அது கருப்பனுக்கு
தெரியும்.அந்த நேரம் அங்கு சென்று வாசலில் காத்து நிற்கும்.அங்கு அவன் வாங்கி போடும் வடையை தின்று விட்டு அவனையே நோக்கி நிற்கும்.அந்த நேரத்தில் யாராவது அவனை தொட்டால் பாய்ந்து,யாரையும் நெருங்க விடாது.
குறிப்பிட்ட நேரம் ஆனதும் அவன் காலை சுற்றி வந்து,காலை நக்கி,அவனை அங்கு இருந்து கிளப்பி விடும்.அவனை பின் தொடர்ந்து வீடு வரை வந்து அவன் உள்ளே போன பின் வாசலில் காத்து நிற்கும்.
ஒரு நாள்,மது கடை வாசலில்,சாலையை கடக்கும் போது,ஒரு சரக்கு வாகனம் வேகமாக வந்து,கருப்பன் மீது மோத,அதன் ஒரு கால் முறிந்து,இரத்தம் வெளி ஏறி கொண்டு இருந்தது.
மணி அப்போது தான் அங்கு வந்தவன்,அதை பார்த்து துடி துடித்து
கருப்பா என்று கத்தி கொண்டு அதை வாரி எடுத்து கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.போனதும்
சுமதி துணியால் இருக்க கட்டி,இரத்தம் போவதை நிறுத்தினாள்.அடுத்த நாள் கால்நடை மருத்துவரை பார்த்து உரிய சிகிச்சை அளிக்க உயிர் பிழைத்து கொண்டது.ஆனால் நடக்க சிரம்பட்டது.
அதை பார்த்த மணி, கருப்பனின்
பாசத்தை எண்ணி,அன்று முதல்
மது குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டான்.மாலை ஆனால் நேராக வீட்டிற்க்கு வந்து கருப்பா என்று கூப்பிட்டு அதனுடன் விளையாடுவது
தான் இப்போதைய பழக்கம்.நாயினால் மது குடிப்பதை மறந்த அவனை சுமதி வியந்து பார்த்து கொண்டு இருந்தாள்.
