அந்நியன்
அந்நியன்
நான் இந்த வீட்டிற்கு புதிதாக குடி வந்துள்ளேன்.
இந்த மும்பையில் எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை.ஹிந்தி மராட்டி எதுவும் தெரியாது.குறிப்பிட்ட சில பேர் மட்டும் ஆங்கிலத்தில். கேட்டால் ஹிந்தியில் பதில் கூறினார்கள்.
பக்கத்து குடியிருப்பில் யார் வசிக்கிறார்கள் என்று சுத்தமாக தெரியவில்லை.நான் ஹிந்தி தெரியாது போங்கடா என்று சொல்லி கொண்டு இருந்தவன்.
என் தலையெழுத்து,தமிழ்நாட்டில் இருந்து,இந்த ஊருக்கு வங்கியில் பதவி உயர்வு கொடுத்து அனுப்பி விட்டார்கள்.வங்கிக்கு சென்றால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஹிந்தி அல்லது மராட்டி மட்டுமே பேசினார்கள்.
அவர்கள் என்னை பார்த்து ஏதோ திட்டி விட்டு செல்வது மட்டும் புரிந்தது..என்ன திட்டுகிறார்கள் என்று சக ஊழியரை கேட்ட போது,.மொழி தெரியாத ஆளை இங்கு எதற்கு வேலைக்கு வைக்கிறார்கள் என்று கேட்டார்கள் என்று மட்டும் சொன்னார்.ஆனால் அவருடைய முக பாவனையில் இருந்து,அதை விட மோசமாக பேசி விட்டு செல்கிறார் என்பது மட்டும் புரிந்தது.
இப்போது எனக்கு தாய் மொழி,மற்றும் ஆங்கிலம்
மட்டும் கற்று கொண்டால் போதாது, பொது மொழியான ஹிந்தியும் படித்து இருந்தால் இந்த ஏளன பேச்சுக்கு ஆளாக வேண்டி இருக்காது என்பது மட்டும் புரிந்தது.
ரயிலில் வரும் போது,தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு பேசும் மக்கள் அதில் பயணித்து கொண்டு இருந்தார்கள்.ஆனால் அவர்கள் எல்லோரும்,அங்கு உணவு,மற்றும் தேநீர் விற்கும் ஆட்களுடன்,சகஜமாக ஹிந்தி பேசி வந்தார்கள்.
படிப்பறிவு இல்லாதவன் கூட ஹிந்தி, மற்றும் தென்
இந்திய மொழிகளை சகஜமாக பேசுவதை கண்டு வியந்து போனேன்.
அப்போது தான் புரிந்தது மொழி தெரியாத ஒரே காரணத்தால் என்னை ஒரு அந்நியன் போல நடத்துகிறார்கள்.
உண்மை தானே,வாய் பேசாதவனுக்கு கூட பொதுவான ஒரு மொழி இருக்கிறது. கண் தெரியாதவனுக்கு கூட அவன் படிக்க பிரத்தியேக மொழி இருக்கிறது.ஆனால் இந்த படித்தவன் மட்டும்,மொழி தெரிந்தும் ஒரு வாய் பேசாதா,முடவனாக நிற்கிறான்.
எல்லோருக்கும் புரியும் ஓரிரு மொழிகளை படித்து கொள்வது எவ்வளவு தேவை என்பதை புரிந்து கொண்டேன்.
மொழி தெரியாத எந்த நபராக இருந்தாலும் ஒரு அன்னியனாக தான் தெரிகிறான்.தமிழ் நாட்டில் மொழி தெரியாதவன் வந்தால் ஒரு வருடத்தில் தமிழ் பேச கற்று கொள்கிறான்.
ஆனால் நம்மை அடிமையாக நடத்திய ஆங்கிலேயரின் உடை, மற்றும் மொழியை,அவனிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய பிறகு கூட விடாமல் பிடித்து கொண்டு
இருக்கிறோம்.
இது தான் இன்று வரை புரியாத இருக்கிறது.
கிணற்று தவளையாக இருந்தால் நம்முடைய நிழல் கூட ஒரு அன்னியனாக தான் தெரியும்.
