Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

அம்மா

அம்மா

3 mins
302


அம்மா.

அழகன் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து வந்தான்.ஆசிரம தலைவர்,ஒரு துறவி,அவரும் திருமண வாழ்வில் பல தோல்விகளையும்,இழப்புகளையும் சந்தித்த பிறகு துறவி கோலம் பூண்டவர்.அவருக்கு சொந்தமான,பத்து சென்ட் இடத்தில் ஒரு தகரம் வேய்ந்த வீட்டில் இருந்து கொண்டு,வசதியற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்து கொண்டு இருந்தார்.

அவர் நிறைய படித்தவர்.

அவரிடம் அடைக்கலம் தேடி வந்த கைம் பெண்கள்,விதவைகள்,

கணவனால் கை விட பட்ட பெண்கள் என்று சில பேர் அந்த ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் பங்கு உள்ளவர்கள்.

அவருடைய ஆசிரமத்திற்கு அந்த வட்டாரத்தில் நல்ல பெயர்.அங்கு இருந்து படித்து பட்டம் பெற்று வெளியில் சென்றவர்கள்,நிறைய பேர்,உயர்ந்த வேலையில் சேவை செய்து கொண்டு,வருடம் ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி

அந்த ஆசிரமத்தின் மேம்பாட்டுக்கு பாடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.


அதனால் பணம் அந்த ஆசிரமத்தில் ஒரு பிரச்சினை அல்ல,.கல்வி சம்பந்த பட்ட காரியங்களை,தேவகி அம்மா என்று ஒருவர்,ஐம்பது வயதுக்குள் இருக்கும் அவர் தான் கவனித்து வருகிறார்.

துறவிக்கு அடுத்த படியாக அவர் தான்.எல்லோரும் அவரை அம்மா என்று தான் அழைப்பார்கள்.

பல குழந்தைகளுக்கு,குறிப்பாக பெற்றோர் யாரென்று தெரியாத குழந்தைகள் அவரை தான் தன்னுடைய அம்மாவாக நினைத்து கொண்டு இருக்கும்.அந்த அளவிற்கு பாசம் உள்ளவர்.

இத்தனை குழந்தைகளுக்கும் எப்படி அம்மாவாக இருக்க முடியும், என்று வயது வரும் போது ஆச்சரிய பட்ட குழந்தைகள் உண்டு.ஆனால் அதை பொருட்படுத்த மாட்டார்கள்.தன்னை பெற்றது தேவகி அம்மா தான் என்று தான் எல்லோரும் எண்ணி கொள்வார்கள்.

அந்த எண்ணத்திற்கு இடம் கொடுக்காமல் தான்,குழந்தைகள் வளர்க்க படுகிறார்கள்.மற்ற பெண்களும் அக்கா,சித்தி,அத்தை,பாட்டி என்று உறவு சொல்லி தான்,வளர்ந்து வருகிறார்கள்.

இவர்கள் வளர்ப்பில் எந்த பாரபட்சமும் கிடையாது.எல்லோருக்கும் ஒரே விதமான,அன்பு, பாசம்,கண்டிப்பு,கடைபிடிக்க பட்டு வருகிறது.யாராவது தேவகி உன் அம்மா இல்லை என்று சொன்னால் கூட,ஒத்து கொள்ள மாட்டார்கள்.அந்த அளவிற்கு,அந்த குழந்தைகள் தேவகி அம்மாவிடம் பாசம் வைத்து இருந்தனர்.

மட்டுமல்ல,பள்ளியில் சேர்க்கும் போது,அம்மா பெயர்,தேவகி என்று தான் அத்தனை குழந்தைகளுக்கும் இருக்கும்.

அழகன் அது போல,படித்து இன்றைக்கு மாவட்ட நீதிபதியாக பதவி ஏற்ற பிறகு,ஆசிரமத்திற்கு வந்து,துறவி,தேவகி அம்மா, மற்றும் அங்கு பணிபுரியும் அத்தனை பெண்களிடமும்,ஆசிகள் வாங்க வந்து இருந்தான்.

அதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது.அதற்கு பிறகு ஒரு விருந்தும் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது.

பாராட்டு கூட்டம் தொடங்கியது.தற்போது இருக்கும் குழந்தைகள்,படித்து முடித்து வேலைக்கு போனவர்கள் என்று பெரிய கூட்டம் கூடி இருந்தது.

அழகனுக்கு பாராட்டு கூட்டம் முடிந்து,எல்லோரும் ஒரு இடத்தில் அமர்ந்து விருந்து உண்டு மகிழ்ந்தார்கள்.

அது நிறைவு பெரும் தருவாயில்,துறவி,உங்களுக்கெல்லாம் ஒரு ஆச்சரியமான செய்தி சொல்ல போகிறேன், என்று சொல்லி விட்டு நம்முடைய அழகன் யார் தெரியுமா,அவனை பெற்ற அம்மா வை உங்களுக்கு இப்போது அறிமுக படுத்த போகிறேன் என்று சொல்லி விட்டு ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போது தேவகி தடால் என்று கீழே விழுந்தார்கள்.பக்கத்தில் சென்று பார்த்தால் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார்கள்.

உடனே அழகன்,தான் வந்த வண்டியில் தேவகி அம்மாவை ஏற்றி பக்கத்தில் இருந்த,மருத்துவ மனையில் சேர்த்து,அவர் உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்று தெளிவு படுத்தி கொண்டு,பிறகு வந்து பார்ப்பதாக கூறி விட்டு தன்னுடைய பணியை தொடர சென்று விட்டான்.

இரண்டு நாளில் நன்றாக தேறி விட்டார் தேவகி அம்மா.

அவரை ஆசிரமத்திற்கு அழைத்து செல்ல வந்து காத்து இருந்தார் துறவி.

தேவகியியை அழைக்க அறைக்குள் சென்றதும்,கதவை தாளிட்டு வர சொன்னார்.

பிறகு துறவியை பார்த்து நீங்களே எனக்கு கொடுத்த சத்தியத்தை மீறலாமா, என்று கேட்க,அதற்கு அவர்,தவறு தான்,சற்று உணர்ச்சி வச பட்டு விட்டேன்.நம் குழந்தைகளில் யாரும் இப்படி ஒரு நிலைக்கு வந்தது இல்லை.மாவட்ட நீதிபதியாக முதன் முறையாக அழகன் வந்து இருக்கிறான்,அவனுக்கு ஒரு சந்தோசமான செய்தியை சொல்ல நினைத்தேன்.பிறகு தான் என் தவறு புரிந்தது.நீ தான் அவனுடைய சொந்த அம்மா என்று கூறி இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பான்,எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் ஒரு நொடியில் மற்ற குழந்தைகளின்,நம்பிக்கையை தரை மட்டம் ஆக்கி இருப்பேன்.நீ சொன்னது போல அவனையும் ஒரு அனாதையாக தான் வளர்த்தோம்,

உண்மையை சொல்லி இருந்தால்

தேவகி அம்மா வைத்த பாசம் போலி என்று மற்ற குழந்தைகள் தவறான முடிவிற்கு வந்து இருப்பார்கள்.தக்க சமயத்தில் நீ மயக்கம் போட்டு காப்பாற்றி விட்டாய்.என்னை மன்னித்து விடு என்று கெஞ்சினார்.

தேவகியின் சொந்த மகன் தான் அழகன்.ஆனால் சிறு வயது முதல் அவனை அனாதை என்று சொல்லி தான் வளர்த்து வந்தார்கள்.அவனுக்கென்று எந்த விதமான சலுகையும் கொடுக்க படவில்லை.ரொம்ப நாள் காப்பாற்றி வந்த ரகசியத்தை துறவியின் அவசரத்தில் உடைந்து போக இருந்தது.தேவகியின் சமயோசிதம் அதை காப்பாற்றி விட்டது.

தேவகியின் ஆயுசுக்கும் அது வெளியில் தெரியாது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract