அம்மா
அம்மா
அம்மா.
பெற்ற தாய்,மகன் கூட இருக்க தான் விரும்புவாள்.அதுவும் ஒரே மகன் என்பதால், வேறு புகலிடம் கிடையாது.ரமேஷ்,தன்னுடைய பூர்வீக வீட்டில் கிராமத்தில் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறான்.
எல்லோருக்கும் பொதுவான விதி அவனை மட்டும் விட்டு விடுமா என்ன.
அவனுடைய தாய்க்கு அவனுக்கு ஒரு திருமணம் செய்து பார்க்க ஆசை பட்டார்கள்.ஒவ்வொரு அம்மாவிற்கும் இயற்கையாக வரும் ஆசை தான்.அவனுடைய அப்பா இருந்திருந்தால் இந்நேரம் திருமணம் முடிந்து இருக்கும்.
கொரோனா வந்த போது அதில் இருந்து அவர் தப்பிக்கவில்லை.
ரமேஷின் அம்மா ஒரு மாற்று திறனாளி,ஒரு கால் ஊனம் என்பதால்,அவர் மரக்கட்டைகள் உதவியுடன் தான் நடந்து வந்தார்.அந்த துயரமான சம்பவம் அவனுடைய அப்பா இறந்து போது நடந்தது தான்.
ஏதோ சிந்தனையில் சாலை ஓரம் நடந்த அவர் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் அவருடைய ஒரு காலை காவு வாங்கி விட்டது.
அதனால் ரமேஷ் தான் அம்மாவிற்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தான்.
இந்த நேரத்தில் ரமேஷ் தாய் மாமா,தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொல்லி ரொம்ப வற்புறுத்தினார்.ரமேஷுக்கு அரை மனது.மாமா பொண்ணு செல்லமாக வளர்ந்தவர்.சமையல் அவ்வளவாக செய்ய தெரியாது.மீறி போனால் வெந்நீர் வைக்க மட்டும் தான் தெரியும்.
தன்னுடைய சகோதரன் பெண் என்பதால் இந்த அம்மாவும் சம்மதம் சொல்லி விட்டார்கள்.மருமகள் வந்தால் தனக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து கொண்டார்.
திருமணமும் நல்ல படி முடிந்து விட்டது.திருமணம் முடிந்து கடமைக்கு ஒரு நாள் வந்து தங்கிய மருமகள்,கிராமத்தில் தன்னால் இருக்க முடியாது,கிராமத்தில் குளிர்சாதன வசதி இல்லை,மால் இல்லை,இன்டர்நெட் இல்லை,டிவி இல்லை என்று ரமேஷ் வீட்டில் தங்க முடியாது என்று தன் தந்தை வீட்டில் நிரந்தரமாக தங்கி கொண்டாள்.
ஒரே மகள் அவள் முடிவை மீற முடியவில்லை.
ரமேஷின் மாமா,அவளுடைய குணத்தை அறிந்து தான்,தான் சகோதரி பையனுக்கு கட்டி கொடுத்தார்.இரு குடும்பத்திற்கும் வசதி பார்த்தால்,ரமேஷ் ஒரு சிறு துரும்பு தான்.
அம்மா பேச்சை தட்ட முடியாமல் இரு
வீட்டிலும் மாறி மாறி இருந்து வந்தான்.
ரமேஷின் அம்மாவும் இப்போது தான் தான் எடுத்த முடிவு தவறு என்று உணர ஆரம்பித்தார்.தம்பி பொண்ணு அனுசரணை ஆக இருப்பாள் என்று எதிர்பார்த்து சம்மதம் சொன்னது பெரிய தவறு என்று உணர முடிந்தது.
நாட்கள் செல்ல செல்ல ரமேஷ் மனைவி,அவனை கிராமத்திற்கு செல்ல அனுமதி கொடுக்கவில்லை.தினமும் ஒரு காரணம் சொல்லி அவனை அழைத்து கொண்டு ஊர் சுற்றி கொண்டு இருந்தாள்.
அம்மாவிடம் தன் நிலைமையை சொல்ல,அவரும் அவளை மகிழ்ச்சியாக வைத்து இரு,நான் எப்படியாவது சமாளித்து கொள்கிறேன் என்று கூற.இவனும் வேறு வழியின்றி அவளுடன் சுற்றி கொண்டு இருந்தான்.
ஒரு நாள் அவள் சாந்தமாக இருக்கும் போது,அம்மாவை அழைத்து வந்து பக்கத்தில் ஒரு வீடு பார்த்து வைத்து கொள்கிறேன் என்று கூற,அதை நானே ஏற்பாடு செய்கிறேன்,கவலை வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.
அவனுக்கும் அவளை பகைத்து கொள்ள விரும்பவில்லை,
காரணம்,அவள் பேயாட்டம் ஆடி விடுவாள்.
தெரியாமல் மாட்டி கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பயந்து இருந்தான்.
ஒரு வாரம் சென்றது,மனைவியிடம் கேட்க பயந்து,நேராக கிராமத்திற்கு சென்று பார்க்க,அங்கு அவன் வீடு பூட்டி இருந்தது.பக்கத்தில் விசாரிக்க தயக்கம்.அப்போது அவனை பார்த்த பக்கத்து வீட்டு பாட்டி,ஒரு வாரம் முன்னாடியே,ஒரு வேன் வந்து உங்க அம்மாவை அழைத்து சென்றது.
அதில் ஏதோ ஆசிரமம் பெயர் எழுதி இருந்தது என்று கூற,உடனே மனைவியை பார்க்க விரைந்தான்.
வந்து மனதில் தைரியத்தை வரவழைத்து,அம்மாவை என்ன செய்தாய் என்று கேட்க,அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டேன்.மாத மாதம் பணம் கட்டி விட்டால்,போதும்,அவர்கள் கவனித்து கொள்வார்கள் என்று கனிவோடு சொல்வது போல கூறினாள்.
அடிப்பாவி,நான் உயிரோடு இருக்கும் போது என் அம்மா ஏன் ஆசிரமத்தில் இருக்க வேண்டும், என்று மிரட்டி கேட்ட போது தான் அந்த ஆசிரமத்தின் பெயரை கூறினாள்.
அலறி பிடித்து அங்கு ஓடினான்.அங்குள்ள நிர்வாகியை பார்த்து,அம்மா அனாதை இல்லை,நான் அழைத்து செல்கிறேன் என்று கூறி அம்மாவை ஒரு வண்டி ஏற்பாடு செய்து கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வந்த பிறகு மாமாவை அழைத்து,உங்களுக்கு கோடி புண்ணியம், என்னையும் அம்மாவையும் விட்டு விடுங்கள்.உறவு விட்டு போக கூடாது என்று அம்மா எதிர்பார்த்தார்கள்,ஆனால் நீங்களும் உங்க மகளும் சுயநலமாக நடந்து கொண்டீர்கள்.உங்க பொண்ணு அம்மாவை அனாதை என்று சொல்லி ஆசிரமத்தில் சேர்த்து விட்டு இருக்கிறாள்.இப்படி பட்ட குடும்பத்தில் இனி ஒரு நிமிடமும் கூட என்னால் சேர்ந்து இருக்க முடியாது.
உங்க மகளுக்கு இந்த கிராமத்தில் வந்து என்னுடன் வாழ்க்கை நடத்த விருப்பம் இருந்தால் அனுப்பி வையுங்கள்.இல்லாவிட்டால் ,விவாக ரத்து கடிதம் அனுப்பி வைக்கிறேன்.முடிவு உங்கள் கையில் என்று கூறி விட்டான்.
சுபம்..
