Amirthavarshini Ravikumar

Fantasy Thriller

4  

Amirthavarshini Ravikumar

Fantasy Thriller

அமாவாசை அலறல்

அமாவாசை அலறல்

2 mins
267


அமாவாசை இரவு. ஊ.... என்று ஓநாய்களின் சத்தம். காற்றிலாடும் மரக்கிளைகளின் ஓசையும் அவலக்குரல் போல் கேட்டது. அந்த பயங்கரமான இரவில் ஒத்தையடி பாதையில் இரண்டு குடிகாரர்கள் நடந்து வந்தனர். தூரத்தில் ஒரு சின்ன ஒளி தெரிந்தது. அங்கே படுத்து உறங்கி காலையில் செல்லலாம் என முடிவெடுத்து இரண்டு பேரும் தள்ளாடி தள்ளாடி ஒளிதரும் இடத்திற்கு அருகில் சென்றனர். ஏதோ அரை போல் இருந்தது. அங்கு உள்ளே ஒரு சின்ன சிம்னி விளக்கு மட்டும் ஆடிக் கொண்டு இருந்தது. அதன் உள்ளே சென்று படுத்தனர். நடு ஜாமம் வந்தது. அலறல் ஒளியுடன் ஒரு கரு உருவம் இந்த இருவர் முன்னும் வந்து நின்றது. இருவரையும் தன் காலால் மிதித்தது. இருவரும் விழித்து பார்க்கையில் போதையில் ஏதோ தெரிகிறது என நினைத்து மறுபடியும் படுத்து உறங்கினார். அதில் ஒருவன் யாரோ எட்டி உதைத்தது போல் சுவரின் மீது மோதினான். எழுந்து பார்க்கையில் தலையற்ற உருவம் அவன் முன் இருந்தது.


ஆ என்று அலறி தரையில் கை வைத்தான். ஆனால் தரை அவன் கையை கிழித்தது. ரத்த கையுடன் தன்னுடன் வந்த இன்னொருவனை தேடினான். இருட்டில் அவனுக்கு ஒன்றும் தெரியவும் இல்லை. அந்த விளக்கு மட்டும் ஆடிக்கொண்டே இருந்தது. திரும்பிப் பார்க்கையில் ஒரு நிழல் மட்டும் தெரிந்தது. பயந்து வெளியே ஓட நினைத்தான் ஆனால் கதவு தானாக சாத்திக் கொண்டது. இன்னொருவன் ரத்த காயங்களுடன் ஒரு மூலையில் கிடந்தான். அவனை எழுதுகையில் அவன் மண்டையில் யாரோ அவன் குடித்து விட்டு வைத்திருந்த பாட்டிலை வைத்து அடித்து விட்டனர். அவனும் மயங்கி விழுந்தான். பொழுது விடிந்தது. இருவர் மீதும் யாரோ தண்ணீரை ஊற்றினர். விழித்து பார்க்கையில் ஒரே மக்கள் கூட்டம். அங்குள்ள மக்களின் ஒருவர், "ஏன்டா குடித்துவிட்டு படுக்க வேற இடம் கிடைக்கலையா? . கை மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் இருவரும் எழும்பி உட்கார்ந்தனர். "இது என்ன இடம்? " என்று கேட்டனர். "இது எங்க ஊரு பலிபீடம் . எந்திச்சி போங்க ". இருவரும் முழித்தனர். அந்த மக்கள் அவர்களை விரட்டினர். வெளியே சென்று அந்த இருவரும் அந்த இடத்தை திரும்பி பார்த்தனர். அங்கு இருந்த ஒரு திருஷ்டி பொம்மை அவர்களைப் பார்த்து சிரித்தது. இருவரும் தலைதெறிக்க ஓடினர்.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy