ஆற்றலும் நுட்பமும்.
ஆற்றலும் நுட்பமும்.
ராஜா அந்த தொழில் நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து கொண்டு இருந்தான்.
இறுதி ஆண்டு ஆனதால் ஏதாவது புதிய தொழில் நுட்பம் கண்டு பிடித்து செயல் முறை விளக்கம் அளிக்க வேண்டும்.
ராஜாவின் கற்பனை ஆற்றல் வித்தியாசமானது.புதிதாக எதை கண்டு பிடிப்பது என்று எப்போதும் ஆலோசித்து கொண்டு இருப்பான்.
இது வரை வாய் மூலம் சொல்லும் வார்த்தைகள் கணினியில் உருவாகிறது,அந்த நுட்பம் இப்போது கைபேசி வரை வந்து விட்டது.
ஆனால் நினைப்பதை எழுதும் ஆற்றல் கண்டு பிடித்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி அதற்கு உண்டான ஆராய்ச்சியில் இறங்கினான்.இதயத்தின்செயல் பாடு,குரல் ஓசை,நடப்பது,ஓடுவது போன்றவை பதிய வைக்கும் மென்பொருள் இருக்கும் போது,நினைப்பதை எழுதும் மென்பொருள் ஏன் உருவாக்க முடியாது என்று எண்ணி,பல மாதங்கள் உழைப்பின் பலனாக,அதையும் கண்டு பிடித்தான்.ஒரு வார்த்தையை நினைக்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம்,அதை செயல் வடிவம் ஆக மாற்றியது.ஆனால் நினைப்பதை
ஆங்கிலத்தில் நினைக்க வேண்டும்.
இதுவே ஒரு வெற்றி தான் என்று
நினைத்து,அந்த ஆராய்ச்சியை பதிவு செய்தான்.ஆரம்பத்தில் எழுத்துக்களை மட்டும் எழுதும் திறனை அறிமுக படுத்தினான்.அதற்கு பிறகு வார்த்தைகள்,வாக்கியங்கள் என்று முன்னேறி,கட்டுரை எழுதும் அளவிற்கு ஆற்றலை மேம்படுத்தி அதில் வெற்றியும் கண்டான்.அவனுடைய கண்டு பிடிப்பு உலக அளவில் பிரபலம் ஆனது எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.
