ஆன் டியூட்டி
ஆன் டியூட்டி
கதிர் அந்த போக்குவரத்து சிக்னல் அருகில் வொயிட் மற்றும் ரெட் கென் ஸ்டிக் கொண்டு ரோடு கராஸ் செய்ய காத்திருந்தான்.
அப்பொழுது அவன் பின் யாரோ வருவதை உணர்ந்து அவன் உடன் வந்து இருந்த நண்பன் துருவ் இருக்கும் பக்கம் ஸ்டிக்கை வைத்து இரண்டு தடவை கீழே தட்டினான்.
துருவ் உடனே போனில் இருந்து கால் யாருக்கோ கால் செய்தான்.(ஸைன் லங்குவேஜ்).
பின்பு துருவ் எழுந்து வந்து கதிரின் உள்ளங்கையில் எழுதி அவனை மறுபக்கம் அழைத்து சென்றான்.
இருவரும் மறுபக்கம் சென்ற பிறகு அங்கு கதிர் பின் வந்து நின்ற நபர் கால் செய்து "கதிர் நாட் ரெடி" என கூறினார்.
கதிர் ஒரு திறமையான காவல்துறை உளவு அதிகாரி,சிறிது நாளுக்கு முன் நடந்த ஒரு சிறு விபத்தில் கண் முழுவதுமாகவும்,காது திறன் பாதியாகவும் குறைந்து போனது.
அந்த விபத்தை செய்தது ஒரு கிரிமினில் இல்லை,கதிரின் தோழி மெக்டலின்.
மெக்டலின் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் வெடி மருந்து செய்து கொண்டிருந்தாள் அவளுடைய காதலன் ஒருவனை மிரட்ட பயன்படுத்துவதற்கு.
அப்பொழுது கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு வரும் கதிர் மெக்டலினை மயக்கம் அடைய வைத்து கை விலங்கிட்டு வீட்டின் வெளியே தள்ளினான்.
அப்பொழுது அங்கு மெக்டலின் தயார் செய்திருந்த கெமிக்கல் வெடித்ததில் கதிரின் கண் பார்வை மற்றும் அந்த கெமிக்கலின் தன்மையால் அவன் செவித்திறன் பாதியாகவும் குறைந்து போனது.
இரண்டு மாதமாக கதிர் குளிர்ச்சி கண்ணாடியும்,வொயிட் மற்றும் ரெட் கென் ஸ்டிக் உடன் பல்வேறு வகையில் மற்றவருடன் பேசுவதற்கு கற்றுக் கொண்டிருந்தான்.
அந்த மாதிரி வெடி விபத்தால் கதிரின் காதலி மியூசியின் நிவேதா தனது கண்களை இழந்தாள்.
இதுவே கதிர் இந்த வழக்கு கைக்கு வந்தவுடன் அதிக நேரம் பணி செய்ய உத்வேகம் அளித்தது.
மெக்டலின் வாக்குமூலம் மூலம் அவள் காதலன் கதிரவன் தேவையான பொருட்களை அவளிடம் கொடுத்து வேலை சொல்வான் என கூறுவாள்.
பல மாத தேடுதல் வேட்டை மூலம் கதிரவினின் இருப்பிடம் அவர்களுக்கு கிடைத்தது.
இந்த ஆப்ரேஷனில் கதிர் இல்லையென்றாலும் அவன் தன் காவல்துறை நண்பர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்தான்.
அந்த டீம் குறிப்பித்த நேரத்தில் அந்த தெருவை சுற்றி வளைத்தனர்.
கதிர் அங்கு ஒரு வீட்டின் கார்டனின் உள்ளே ஒளிந்திருந்தான்.அவன் அந்த இடத்தில் இரண்டு மூன்று தடவை சுற்றி நடந்து வந்து எந்த பொருள் எங்கு உள்ளது என பார்த்து வைத்து கொண்டிருந்தான்.
கதிர் ஒரு இடத்தில் கீழே ஒரு பொருள் கென் மூலம் தட்டுபடுவதை வைத்து அதை தொட்டு பார்த்து மெக்டலின் வீட்டில் இருந்த கெமிக்கல் பாக்ஸ் என உணர்ந்தான்.
கதிர் முடிந்த அளவு வெளி வந்து மற்ற நபர்களை அழைக்க முற்பட அவர்கள் வரவில்லை.
அப்பொழுது அங்கு வந்த தன் ஆபிஸரை கூட்டி சென்று அந்த பாக்ஸை காட்டி அது கெமிக்கல் பாம் என எச்சரிக்கை செய்ய அந்த ஆபிஸன் கதிரை பிடித்து கொண்டு போய் ஒரு ஓரத்தில் உட்கார வைத்துவிட்டு மற்றவர்களிடம் இவரை ஏன் சார் கூப்டிங்க என கத்தினார்.
அந்த பாக்ஸின் உள்ளே ஒரு மினி கெமிக்கல் பாம் மெல்ல வெடிக்க தயாரானது.
தீடீரென கதிர் அந்த ஆபிஸரை தள்ளி விட்டு அந்த பாக்ஸை தூக்கி கொண்டு யாரும் கிட்ட வராதீங்க என சொல்லி கொண்டே ஓடினான்.
கதிர் ஒரு கையால் சுற்றி என்ன உள்ளது என உணர்ந்து கொண்டு ஒரு வெட்டவெளி இருப்பதை உணர்ந்து அதன் உள்ளே செல்ல சின்ன குழந்தைகள் விளையாட அந்த குழந்தைகளை ஓடு என தன் குச்சியால் விரட்டினான்.
அந்த குழந்தைகள் அழுது கொண்டே ஓட அந்த சத்தம் கதிருக்கு மெல்ல கேட்டது.
கதிர் நிவேதாவை விபத்திற்கு பின் பார்த்து கொண்டது பற்றி நினைத்து பார்த்தான் பின்பு அவளின் அக்காவின் ஒரு வயது குழந்தையுடன் இருவரும் போட்டோ எடுத்து கொண்டதை மனதில் மெல்ல அசைபோட்டான்.
அப்பொழுது ஒரு வெடி சத்தம் தூரத்தில் கேட்டது.
கதிர் அங்கு பலர் நடந்து வருவதை உணர்ந்து பெட்டியை அங்கு வைத்து விட்டு அவர்களை குச்சியால் கிட்ட வராதீங்க பாம் இருக்கு என சொல்லி குச்சியை சுழற்றினான்.
அவர்கள் சிரித்த சத்தப் மெலிதாக அவனுக்கு கேட்க அப்பொழுது ஒரு கை கூட்டத்தில் இருந்து வந்து அவனை பின்னாடி தள்ளியது.
மக்களை போங்க போங்க என விரட்டினான்.
அனைவரும் அங்கிருந்து செல்ல அந்த ஒரு நபர் மட்டும் நின்று "குட் பாய்" என பெட்டியை எடுக்க முன்னால் சென்றான்.
அதை உணர்ந்த கதிர் அந்த நபரை தன் கெனால் அடித்தான்.
பின்பு அந்த கதிரை அடித்து தள்ளி விட்டுவிட்டு நடந்து செல்ல அங்கு வரும் காவல்துறை அவனை தடுக்கிறது.
கதிரவன குரல் கேட்க கதிர் அவன் யார் என்றே தெரியாமல் எதிர்பாராத நேரத்தில் கதிரவனை தாக்க அந்த கெமிக்கல் பாக்ஸ் திறந்தது.
பின்பு அந்த பாக்ஸ் வெடிக்க அங்கு புகை சூழ்ந்தது (சிறிது சக்தி கொண்ட கெமிக்கல்).
கதிர் தன் கெனின் முனையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த புகையில் கீழே கிடந்த கதிரவனின் கால்களில் ஓங்கி குத்தினான்.
அலறல் சத்தம் கேட்ட அதே நேரத்தில் எங்ககோ இருந்து ஒரு பெரும் வெடி சத்தம் கேட்டது.
