saravanan Periannan

Abstract Drama Classics

4.7  

saravanan Periannan

Abstract Drama Classics

10 கதைகள்

10 கதைகள்

4 mins
357


1) மீன்,மீனவர்களின் வாழ்வாதாரம்


1990


டேய் வலையை பார்த்து அத்துடாம போடு,


அப்பறம் சின்ன மாமா கயல் கல்யாணம் இருக்குல எப்ப என சுந்தர் கேட்டு கொண்டிருக்கும் போதே இலங்கை கடல்படை கப்பல்கள் ஒன்று அந்த படகை தாக்க ஆரம்பித்தது.


சுந்தர் படகில் ஒளிந்து கொள்ள அவன் மாமா அவன் கையை பிடித்து கயலை பாத்துக்கோ என சொல்லி முடித்தவுடன் அந்த படகில் குதித்த இலங்கை கப்பல்படை வீரர்கள் அவர்களை கைது செய்து இழுத்து சென்றனர்.


கயல் மனசு நொந்து போச்சு.


இந்திய அரசு தற்காலிகமா கைது ஆனவங்கள ரீலீஸ் பண்ணுச்சு.


கயல் படித்தப்படி தன் குடும்பத்தை பார்த்து கொண்டாள்.


கயலின் அம்மா விற்கும் மீன்களை பார்த்தாலே கயலுக்கு கோபம் வரும்.


கயல் அந்த மீன்கள் மீது வெறுப்பு காட்டினாலும் அந்த மீன்கள் தான் அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை அளித்தது.


கயல் மீன் விற்பனை மீது காட்டும் வெறுப்பை அறிந்த அவள் அம்மா அவளை அழைத்து  "மீனுங்க நம்மள வாழ வைக்குது.‌ அது நம்ம சாமி மா.


அது நம்ம வலையிலே மாட்ற‌ மாதிரி,நம்ம அரசியல் அப்படின்கிற வலையிலே மாட்டிகிட்டு இருக்கோம்."

2) ஆமை,

கடினமான‌ ஓடு

ஏய் என சொன்னா கேட்கமாட்டியா,வளர்ந்தித்தோம்னு திமிரு.


அம்மா சும்மா திட்டாதே என சொல்லி சரவணன் கோபமாக அவன் அம்மாவிடம் பேசவே இல்லை.


இதை கவனித்த சரவணின் தந்தை அவனை ஒரு விலங்கு பூங்காக்கு‌ அழைத்து சென்று‌ ஒரு ஆமையை காட்டி அந்த ஓடு‌ பற்றி கேட்டார்.


சரவணன் தெரியல அப்பா என‌ சொல்ல அவன் அப்பா "அந்த கடினமான ஓடு இல்லனா அந்த ஆமை தைரியாமா நடமாட முடியாது.

உங்க அம்மா உன் கிட்ட கடினமா இருக்குறது உன் நல்லதுக்குதான்." என‌ சொல்கிறார்.


வீடு திரும்பியவுடன் சரவணன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறான்.


3) வராகபகவான் சிரித்தார்


கலிவளவன்‌ அந்த தெருவில்‌‌ உள்ள அரசியல்வாதி.


கலிவளவன் தன் ஒற்றை‌ பலமான அரசியலை வைத்து பல கேடுகள் புரிந்தான்.


உச்சகட்டமாக கோயிலில் இருந்து வராக மூர்த்தி சிலையை கடத்தி சென்ற போது அதை தடுக்க வந்தவர்களை ஆட்களை வைத்து காயப்படுத்தினான்.


20 வருடங்கள் போட்ட ஆட்டம்,அவன் அரசியல் செல்வாக்கு குறைய குறைய நின்று போனது.


ஒற்றை கொம்பு உடைய காட்டு பன்றி தன் கொம்பை இழந்து வாடுவது போல் வாடினான்.




கலிவளவன் உடல்நிலை மோசமானது.


கோயிலுக்கு திரும்ப வந்த வராகமூர்த்தி திருவிழாவை கொண்டாட பணத்தை வாரி இரைத்தான்.


தன் பாவத்தை மன்னிப்பாய் வராக‌ என‌ கூறினான்.


போலீஸ் அவனை வந்து இத்தனை ஆண்டுகாலம் அவன் செய்த குற்றங்களிற்காக அவனை இழுத்து சென்றனர்.


அவன் அந்த வராகமூர்த்தி சிலையை திரும்பி பார்க்கும் போது தீபாராதனை வராக பகவான்‌ முகத்தில் பட வராக பகவான் சிரிப்பதுபோல இருந்தது‌ கலிவளவனுக்கு.


"அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்."

4) சிம்மம்,சிங்கத்தின் கர்ஜனை

ஆசிரியர் விமலநாதன் பள்ளியில் வகுப்பு எடுத்து கொண்டிருத்தார்.


அந்த வகுப்பில் நம் ஊர் ஏரியை தூர் வாருவதையும் ,நீர்நிலை மேலாண்மை ஆகியவற்றை பற்றி கற்று குடுத்தார்.


இதை அந்த மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள ஊரார் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஏரியை தாங்களே தூர்வார ஆரம்பித்தனர்.


ஏரி சுத்தமாக மாறியது,நீர் தந்து தாகம் தணித்தது.


5) வாமனன்

  புரோபஸர் விஸ்வா தன் ஆராய்ச்சி பணிகளை தன் மாணவர்களுடன் செய்து கொண்டிருந்தார்.


அப்பொழுது அவருடைய‌ மாணவன் ஒருவன் சார் இந்த கனெக்ஷன் மின்சுற்றுல தப்பா இருக்கு.


விஸ்வா அதை கேட்கவில்லை.


நான் எவ்வளோ அறிவாளி அப்பறம் எத்தனை ஆராய்ச்சிகள் பண்ணிருக்கேன் எனக்கு தெரியாதா என அதை விஸ்வா பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.


ஆனால் யாருக்கும் தெரியாமல்,அந்த மாணவன் சொன்ன கரெக்ஷனை செய்கிறார் விஸ்வா.


அந்த மாணவன் சரியாக ஒவ்வொரு கனெக்ஷனாக பார்த்து பார்த்து‌ 100 கனெக்ஷன்களில் தவறானதை கண்டுபிடித்து சொல்லியுள்ளான்.


விஸ்வா அந்த மாணவனை அனைவர் முன்னாக அழைத்து பாராட்டுகிறார்.


6) ருத்திரம்

பீஷ்மன் செய்த தவறு அம்பையின் விருப்பம் கேளாமல் சுயம்வரத்தில் தன் அளவு கடந்த பலத்தை பிரயோகித்து மூன்று காசிராஜன் பெண்களையும் அஸ்தினாபுரம் அரசனுக்கு திருமணம் செய்து வைக்க அழைத்து வந்தார் .


தன் சீடன் செய்த தவறை உணர்த்தி அதை சரி செய்ய அவனுடன் கோபமாக சண்டையிட்டார் பரசுராமர்.


பீஷ்மன் தன்னுடைய வாக்கு முக்கியம் என்று நினைத்து குரு பரசுராமர் சொல்வது புரியாமல் சண்டையிட்டான்.


பரசுராரும் பீஷ்மனின் நிலையை எண்ணாமல் சண்டையிட்டார்.


கோபம்‌ அவர்களை யோசிக்க விடாமல் தடுத்தது.


ஈசன் தோன்றி அம்பைக்கு வரம் தந்தார் ''மறஜென்மம் எடுத்து புனர்ஜென்ம வாழ்வில் உனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி தீர்ப்பாய் மகளே அம்பை."


கதையின் கருத்து: "இன்னொருவர் நிலை பற்றி சிந்திக்காமல் செயல் ஆற்றுவது பெரும்பாவம் ஆகும்."


7) அன்பான மனைவி 

அருண் தன் மனைவி பிரியாவிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தான்.


பிரியா அடிக்கடி உடம்பு சரியிலாமல் போகவே அருண் மருத்துவமனை அழைத்து சென்றான்.


பிரியாவுக்கு கேன்சர் என்பது தெரியவந்தது.


அருண் மனமுடைத்து போனான்.


பிரியா அவனை வேறு திருமணம் செய்து செய்ய சொல்ல அருண் கோபமாக "பிரியா இன்னொரு கல்யாணம் என்னால யோசிக்க முடியல,நீ கஷ்டபடும் போது நான் போய் சந்தோசமா இருப்பேனா" என‌‌ சொல்லி அழுதான்.


"பிரியா கேன்சர் டீரிட்மென்ட் எடுத்து கொள்வதால் அவளால் ரத்த தானம் செய்ய முடியவில்லை."


 அருண்‌ ரத்த தானம் குடுக்க ஆரம்பித்தான்.


பிரியா மகிழ்ச்சியடைந்தாள்.


ஐந்து வருடங்கள் கழித்து,கேன்சரை வென்ற பிரியா தன் கைகளை அருண் கையுடன்‌ கோர்த்து பார்க்கில் நடந்து சென்றனர்.


8) கலப்பை 

இயற்கை விவசாயி பலராம் தன்னுடைய வயலில் இயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தாமல், இயற்கை விதைகளை வைத்து நல்ல விளைச்சல் ஈட்டினார்.


தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த டிரிப் ஈரிகெஷன் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் அளித்தார்.


அவரை பொருத்த வரை "இயற்கை விவசாயம் என்பது படிபடியாக மேலறினால் இலக்கை அடையலாம்.

ரசாயன‌ விவசாயம் படிகளை வேக வேகமாக தாண்டுவது போன்றது. கால் படியை தாண்டும் போது தடுக்கினால் நிச்சயம் வீழ்ச்சிதான்."


9) புல்லாங்குழல் 

கண்ணன் தன் பள்ளியில் மிகவும் சாது ஆனவன்.


கண்ணன் புல்லாங்குழல் வாசிப்பதில் ஆர்வமும் அதே நேரத்தில் பயிற்சியும் கொண்டிருந்தான்.


கண்ணன் தன் அம்மாவுக்கு கிடைத்த டிரென்ஸ்பர் காரணமாக ஒரு வாரத்தில் அந்த ஊரை விட்டு‌ செல்ல வேண்டும்.


பள்ளியில் ராதாவும் கண்ணனும் பேசி கொண்டாலும்‌ ஒருவர்‌ மீது ஒருவர் கொண்ட காதலை வெளிபடுத்தவில்லை.


கண்ணன் தான்‌ ஒரு வாரத்தில் ஊரை விட்டு செல்வதை பள்ளியில் கூறினான்.


ராதா இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.


தன் நண்பர்களுக்காக புல்லாங்குழலில் வேணுகானம் வாசித்தான்.


பள்ளியை விட்டு செல்லும் முன்‌ ராதாவை பார்த்து தன்‌ புல்லாச்குழலை குடுத்து விட்டு வந்தான்.


இருவரும் ஒரே நேரத்தில் அழுகையும்,சிரிப்பையும் வெளிபடுத்தியபடி வெவ்வேறு பாதையில் சென்றனர்.



10) கல்கி பகவான் வருகிறார்

கலியுகத்தின் முடிவில்


மக்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு தன் பொருள்களை விடுத்து மற்றவர் பொருள்களை திருட தொடங்கினர்.


அரசாங்கம் மக்கள் செய்யும் தவறுகளை கண்டிக்காமல் விட்டது.


அரசாங்கம் தான் செய்த தவறுகளை மறைப்பதில் தீவிரமாக இருந்தனர்.


மதுபான பீப்பாய்கள் டன் கணக்கில் காலியானது.


போலி மதகுருக்கள் கடவுளை பார்க்க வழி சொல்லாமல் நாங்களே கடவுள் என்றும்,கடவுளிடம் அழைத்து செல்வதற்கு செல்வ குவியல் வாங்குவார்கள்.


பகவான் விஷ்ணு பூமியில் கல்கியாக அவதாரம் எடுத்து தவறான பாதையில் மக்களை அறிவுரைகள்,புனித நூல்கள் மூலம் தன்‌ தோழர்களுடன் நல்வழி படுத்த முயல்வார்.


ஆனால் யாருமே வந்திருப்து கடவுள் என உணராமல் தீமைகளை தொடர்ந்து செய்வர்.


கல்கி பகவான் தன் இரு கைகளில் வாளும் கேடயமும் எடுத்து தீயவர்களை அழிக்க ஆரம்பித்தார்.



 





Rate this content
Log in

Similar tamil story from Abstract