STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Inspirational

3  

ANURADHA CHANDRASEKHAR

Inspirational

விழுந்தேன் எழுந்தேன்

விழுந்தேன் எழுந்தேன்

1 min
208

விழுந்தேன்

ஏழையாய்ப் பிறந்துவிட்டால்

ஏமாற்றம்தான் பரிசா?

வானில் பறக்க சிறகாய் எண்ணி

வானியல் துறையைத் தேடினேன்

மண்ணில் புதையச் சொல்லி

தொல்லியல் துறைதான் பரிசு


மண்ணில் புரண்டு குழந்தை அழுதது 

குழந்தையைப் பார்த்தேன் கவிஞன் தெரிந்தான் 

ஆரம்பத்தில் பிறப்பு உன்கையில் இல்லை

அடுத்த படிப்பும் உன்வசம் இல்லை

பாதை வகுக்கப் பலப்பல பயணங்கள்

இதுதான் பாதை இதுதான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது

கவிஞன் அள்ளித் தெளித்துப் போய்விட்டான்

அவனுக்கென்ன எழுதிவிட்டான்

அகப்பட்டவன் நான்தானே

குழந்தை அழுதது 

'நீமட்டும் தனியில்லை தோழா'


எழுந்தேன்

விண்ணில் மட்டுந்தானா

மண்ணிலும் உண்டு சாதனை

மாறினேன்

என்னை மாற்றினேன்


குழந்தை கை பிடித்து எழுந்த குழந்தை நான்

 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational