விழியில் நான்
விழியில் நான்
1 min
406
பூவெல்லாம் மாலை ஆக புதுப்பெண்ணாய் நீயும் மாற அழகான அந்த நாளில்
அன்பே உன் விழியில் நானே
இதழோரச் சிரிப்பே போதும் நுதலோடு பதிப்பேன் முத்தம் இமையாகக் காப்பேன் கண்ணே சுகமான சுமைநீ பெண்ணே
வளமான வாழ்வில் இன்று
வந்ததே வசந்தம் நன்று
நலமாக வாழ்வோம் நாளும் பதினாறு செல்வம் பெற்றே
வயது கடந்த போதும்
வாலிபம் மாறாது கண்ணே
ஆயுள் முடியும் வரை
அன்பு குறையாது பெண்ணே