வேலைக்காரி
வேலைக்காரி
நாளெல்லாம் பாத்திரத்துடன்
பேசிப்பேசி விரல்களுக்கு
ஒரே நசநசப்பு!
பிள்ளையின் பிறந்தநாள்
வருகைக்காக தகுதிக்கு
மீறிய செலவுகள்!
வாங்கி வந்த கேக்குகளும்
இனிப்புகளும் நண்பர்களுக்காக
அளித்த வெற்றுப் பெருமை
பேசிய பிள்ளை தூக்கி
எறிந்த சரிகைத்தாளில்
ஒட்டிக் கிடந்த கேக் துணுக்குகளுடன்
வயிற்றுப் பசியாறிய தாய்!
வெண்சாமரம் இறுதிநாளில்
வீசவில்லை என்றாலும்
கொள்ளி வைக்கும் பிள்ளைக்காக
தன் சுகம் மறந்த தாய் மரமானாளோ!