வாழ்க்கை சக்கரம்
வாழ்க்கை சக்கரம்
நோயைக் கண்டு
நாளும் அஞ்சியே
நிம்மதி தொலைய
மருந்தும் இல்லா சூழலில்
சிறு தும்மலும்
தொண்டை செருமலுமே
உயிர் நடுங்கும் பீதியை தர
திரிகடுகம் கவசமாய் காத்து நிற்க
தெம்பும் புத்துணர்வும் பெற்றே
உடலும் உள்ளமும் உறுதியாக
சகஜ வாழ்வும் திரும்பும் நாளை
எதிர்பார்த்தே - பொறுமையாய் உழலுது
வாழ்க்கை சக்கரம் !