STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

வா! அள்ளித் தா!!!

வா! அள்ளித் தா!!!

1 min
262

இயற்கையைக் கொன்றோம்...

இழப்பைக் கண்டோம்!

பிழைப்பை இழந்தோம்!

உழைப்பை இழந்தோம்! 

நலிவடைந்தோம்!

வறுமை கண்டோம்!

மனவலிமை கொண்டே..

வறுமையை சென்றோம்!

தொற்று கொண்டே...

கற்றுக்கொண்டோம்!

தனித்திருந்தோம்!

விழித்திருந்தோம்!

பிழைத்திருந்தோம்!

காத்திருந்தோம்...

விடியலை நோக்கி! 

இழந்தன சிலவாயினும்.. 

பெற்றன பலவாகும்!

2022 வா!!

உனை வரவேற்க 

காத்திருக்கிறோம்! 

உரம் படைத்த நெஞ்சத்தோடே!!

திறம் படைத்த கரத்தோடே!!!! 

அறம் படைத்த எண்ணத்தோடே!!!

வருவது யாதாயினும்...

தருவது எதுவாயினும்....

உறுவது ஏதாகிலும்.....

எதிர்கொள்ளக் காத்திருக்கிறோம்!

இன்முகம் கொண்டே வரவேற்கிறோம்!

வலு கொண்ட நெஞ்சத்தோடே!!!! 

வா!!! 2022 வா!!!

மன்பதை வாழ்விக்க!!!

மனமெல்லாம் மகிழ்விக்க !!

வா! வளங்களை அள்ளித் தா!!!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational