உடனே வந்துவிடு ❤️ காதலா
உடனே வந்துவிடு ❤️ காதலா


நீ அருகில் இல்லாதபோது
என் கூந்தலும் சூட மறுக்கிறது
உன் மணமில்லாத மலரை!!!
நாவின் சுவை மொட்டுகள்
உண்ண மறுத்து
உண்ணாவிரதம் இருக்கின்றன!!!
என் சிரிப்பு
வெளிவராமல்
உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறது!!!
தூக்கம்
இமைகளுக்கருகில்
தர்ணா போராட்டத்தில் இணைகிறது!!!
வார்த்தைகள்
இதழ் தாண்டி வராமல்
மௌன விரதமிருக்கிறது!!!
உன் ஸ்பரிசமின்றி
உணர்வற்றுக் கிடக்கிறது
என் உடலும் மனமும்!!!
மனம் இப்போரில்
இணையும் முன்
மணவாளனே வந்துவிடு!!!
உனக்கான
நீண்டகால காத்திருப்பில்
குறுகிப் போன நான்
உருகிப் போகும் முன்
என் முன்னே வந்துவிடு!!!
போராட்டங்களையும்
விரதங்களையும்
தடை செய்துவிட்டு
இரண்டறக் கலந்துவிடு!!!