உனக்குத் தெரியும் தானே
உனக்குத் தெரியும் தானே


உனக்குத் தெரியும் தானே... பூ அவிழ்வது போல்.....சாரல் தெளிப்பது போல்...பிஞ்சுவிரல் பரிசம் போல் ..உன்னையும் ரசிக்கிறேன் என்று ...
உனக்குத் தெரியும் தானே
ஆகாயத்தைப் போல்.. சமுத்திரத்தைப் போல்.. மலைகளைப்போல் உன்னையும் வியக்கிறேன் என்று....
உனக்குத்தெரியும் தானே...
மழையில் நனைவது போல்.. கரையிருந்து கடல்குடிப்பது போல்...ஆற்றில் குளிப்பது போல்...உன்னையும் காதலிக்கறேன் என்று....
உனக்குத்தெரியும் தானே...
கண்ணின் இமைப்போல
கரங்களைப்பிடிப்பது போல ..
கட்டி அணைப்பது போல ..உன்னை தழுவிக்கொண்டேயிருக்கின்றேன் என்று....
உனக்குத்தெரியும் தானே...,..எதுவாகி போகினும்...உன்னில் நானும் என்னில் நீயும்...இமைப்பொழுதும் பிரியாது ..உறவாடுகிறோம் என்று....
உனக்குத்தெரியும் தானே.....தெரிந்தும் ஏன் ..தனியே தொலைந்து போக நினைக்கிறாய்.......நான் இல்லாத உலகில் எப்படி பயணிப்பாய்...