தொட்டு விடும் தூரம்
தொட்டு விடும் தூரம்
உள்ளச் சிந்தனை
தெளிவாய் இருக்க
எண்ணமெங்கும் இலட்சியம்
நிறைந்தே இருக்க
முயற்சியின் படிக்கட்டுகளில்
தன்னம்பிக்"கை" பற்றியே
தளராது துவளாது நடை போட
எதிர்வரும் தோல்வி தடையனைத்தையும்
வெற்றிப் பாதைக்கு
படிக்கல் ஆக்கியே
முன்னேறிக் கொண்டிருக்க
அனுபவங்கள் ஆசானாய்
வழிகாட்டி முன்செல்ல
தொட வேண்டிய இலக்கும்
தொட்டு விடும் தூரம் தான் !
