தொலைபேசி
தொலைபேசி
தொலைபேசியாக இருக்கையில்
அத்தியாவசியமாக இருந்தாயே ....
கைபேசியாக சுருங்கியதும் நீயே
தொல்லைபேசியாகவே மாறினாயே !
தொலைபேசியாக உறவுகளை இணைத்தாய் -
அண்டை அயலாரையும் நட்புறவாக்கினாய் !
நீயும் உருவில் சுருங்கினாலும் சுருங்கினாய் -
ஒவ்வொருவரையுமே தனித்தீவில் தான்
சஞ்சரிக்கச் செய்தாய் !
இவை மட்டுமா?
கைபேசியின் அலைவீச்சு
அது மனிதனின்
உடல் மற்றும் உள்ள நலனுக்குமே தான்
வலை வீசுதே !
அறிவியல் மனித நலனுக்காக மட்டுமே இருக்கட்டுமே !
அளவோடே பயன்படுத்துவோம் !
வளமோடு வாழ்ந்திடுவோம் !
