தண்ணீர் பஞ்சம்
தண்ணீர் பஞ்சம்

1 min

23.7K
வறுமையின் கோட்பாடு எல்லை மீறிவிட்டதே
வறுமையின் வறட்சி ஊரெங்கும் நாவின் வரட்சியாய் மாறியது கிணற்றிலும் ஊரவில்லை
கம்மாயிலும் வற்றிப்போனது
பொடி நடையாய் நடந்து வெயிலிலே காய்ந்து வேர்த்து விறுவிறுக்க மயங்கி நின்றால்
ஒரு சொட்டு கூட வரவில்லையே
காற்றுதான் வந்தது..
வாழைமரம் வேரோடு சாய்ந்து என்னைப்பார்த்து கேட்டது அழுகையோடு கண்களில் கண்ணீர் கூட வரவில்லை ஒன்றும் இல்லாத பாவியாய் வறண்ட பூமியில் நிற்க கூட தெம்பில்லாமல் சாய்ந்துவிட்டேனே..
விழிப்புடன் இருந்தால் இனிவரும் சமுதாயமோ
உயிர் வாழ நீரை சேமிக்க வில்லையென்றாலும் பரவாயில்லை வீணாக்குவதை தவிர்க்க சொல்லுங்களேமா.. என்று கதறியது...
ஆமாம்
தண்ணீர் பஞ்சம்தான் ஊரெங்கும்...