STORYMIRROR

Megath Thenral

Tragedy Crime Inspirational

5  

Megath Thenral

Tragedy Crime Inspirational

தனிமை

தனிமை

1 min
462

தனிமை.....!!! 

இது சிலருக்கு வரமாகவும், 

பலருக்கு சாபமாகவும் மாறி விடுகிறது, 

சிலர் இதனை அனுபவித்து ரசித்து வாழ தங்களை தாங்களே மாற்றிக் கொள்கின்றனர், 

ஆனால் பலரால் இந்த தனிமையின் வலியை தாங்க முடிவதில்லை, 

தங்களை இழந்து, 

ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாக மாறி விடுகிறார்கள், 

அது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம், 

சிலர் போதை பழக்கத்திற்கு, 

சிலர் சமூக வலைத் தளங்களுக்கு, 

இதிலிருந்து அவர்கள் வெளிவர நினைத்தாலும் முடிவதில்லை, 

அவர்களுக்கே அது பிடிக்கவில்லை என்றாலும், 

அவர்களால் அதை செய்ய முடியாமல் இருப்பதில்லை, 

தன்னை சுற்றி இருப்பவர்களிடம், 

தன் மீது அன்பு செலுத்துபவர்களிடம், 

அவர்களால் மனம் விட்டு பேச முடியாமல் போய்விடுகிறது... 

சின்ன சின்ன வலிகளை தாங்க முடியாமல், 

எல்லோரையும் விட்டு விலகி விடுகிறார்கள், 

எனவே உங்களுக்கு பிடித்தவர்களுக்கோ, 

உங்களை பிடித்தவர்களுக்கோ, 

எப்போதும் தனிமையை மட்டும் எப்போதும் பரிசளித்து விடாதீர்கள்...


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy