STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

திருவிழா

திருவிழா

1 min
177

வீதியெங்கும் தோரணம் ....

கொடிகள் ஆயிரம் வாரணம்! 

சாலையெங்கும் பரபரப்பு....

வாகனங்களின் அணிவகுப்பு!

கட்சியினரின் ஆர்ப்பரிப்பு... 

வேட்பாளர் வருகை ஒலிபரப்பு!

வானவெளியில் வர்ணஜாலம்...

வழிநெடுகிலும் வண்ணக்கோலம்!

தாரத்தப்பட்டைகளில் செவிகள் கிழியும்....

கூட்டநெரிசல் வீதிதோறும் வழியும்! 

சோறும் பாரும் சுருதியைக் கூட்டும்..  

மதுஓடை நாளும் மனதினை மீட்டும்!

கோடை வெயிலும்  குற்றாலச்சாரலாய் குளிர்ச்சியூட்டும்!

குளுகுளு அறிக்கைகள் ஏழைகளைக் கிளர்ச்சியூட்டும்!

கரண்ட் கனெக்ஷன் இரவில் பிணக்கும்....

கரன்சி நோட்டுகள் வீடுதோறும் பறக்கும்! 

ஆரத்தித் தட்டுகள் அழகாய் தேடிவரும்....

வெற்றித்திலகம் வீரவாள்கள் ஓடிவரும்!

அண்ணன் தம்பியாய் சுற்றித் திரிந்த பட்டாளம்....

தேர்தல் விழாவோடு நின்று விடும்!

ஓடியாடி உழைத்தக் கூட்டம்

 ஓரமாய் காத்து நிற்கும்!

விலைவாசி ஏற்றத்தில் மிரண்டு கிடக்கும்...

விடியல் தேடி அரண்டு நடக்கும்! 

அடுத்த தேர்தலில் பார்ப்போம் கங்கணம் கட்டும்!

கரன்சி நோட்டைப் பார்த்ததும்....

சரண்டர் ஆகும்!

ஐந்தாண்டுக்கு ஒருமுறை...

அரசியல் காணும் நல்விழா! 

ஜனநாயகத் திருவிழா...

ஜனத்துக்கான ஒருவிழா!

பணத்தை நாடிச் செல்லாதீர்...

இனத்தைத் தேடி நில்லாதீர்! 

ஜனமே ஓடி வாருங்கள்....

சதம் வாக்கினைத் தாருங்கள்! 

வாக்களிப்பது உம் கடமை...

வாக்கு உமது உரிமை!


  


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational