STORYMIRROR

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Action Classics

4  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Action Classics

தீபாவளி வாழ்த்து

தீபாவளி வாழ்த்து

1 min
222

இறைவனின் பேரருள். பேரொளியாக நிறைந்த 

ஒளியின் திருநாளான. தீபாவளித் திருநாளில்

இறைவனின் இணையற்ற பேரருளின் பேரொளியால்...

நாமேயறியாது நம்மைச்

சூழ்ந்திருக்கும் இருளும்..

சிந்தையில் மடமையாய்

முடங்கியிருக்கும் இருளும்..

ஆழ்மனதில் அகலா குழப்பமாக

ஆழ்ந்திருக்கும் இருளும்

இதயத்துள் தயக்கமாக

புதைந்திருக்கும் இருளும்

ஊரெங்கிலும் ஊழலாக

மலிந்திருக்கும் இருளும்

ஏழைகளோடு வறுமையாக

ஒட்டியிருக்கும் இருளும்..

நேர்மையற்ற அரசியலில்

நிறைந்திருக்கும் இருளும்..

புதுப்புது நோய்களாக மக்களை

வாட்டிவதைத்திடும் இருளும்..

இன்னபிற இருளும்     முழுவதுமாக விலகி 

இறைவனின் அருளொளி     உலகெங்கும் நிறைந்து

மக்கள் என்றென்றும்   மகிழ்ந்திருக்க அருள் வேண்டி

இறைவனை வணங்குகிறேன்..

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..

தொடரும் அன்புடன்

இரா.பெரியசாமி..


Rate this content
Log in

Similar tamil poem from Abstract