தேநீர் தேவதை
தேநீர் தேவதை
உன் மணம் வந்தாலே
என் மனம் புத்துணர்வடையும்...
தலைவலிக்கு ஆக சிறந்த மருந்து நீ
உன்னை அருந்தியதால் தலை வலி போனதா?
இல்லை உன்னை அருந்தாததால் தான்
தலைவலி வந்ததா?...
பெண்களின் பெரிய போதை நீ
பெண்கள் மட்டுமல்ல
நாடே அடிமைதான் உன் கதகதப்பிற்கு...
இடைநில்லா பேருந்தும்
உடன் நிற்கும் உனை சுவைக்க...
சோர்ந்த என்னை சுறுசுறுப்பாக்குவது
பணியிடையே நான் அருந்தும் தேநீர்...
எதையும் பங்கிடாத கருமி கூட
உனை அருந்த கூட்டிச் செல்வான்...
நாட்டு நடப்பை பேச மூளையை தூண்டுவது
நீயும் உன் நண்பன் செய்திதாளும் தானே?
அனைவரையும் ஒருங்கிணைத்து உன்கட்சிக்கு
பொதுக் கூட்டம் நடத்துகிறாய்
பெரிய அரசியல்வாதி தான் நீ...
பால்விலை உயரும் போதெல்லாம் உணர வைக்கிறாய், உன் அருமையையும்
விவசாயிகளின் பெருமையையும்...
மொத்தத்தில் வழிப்போக்கர்களின் வலிப்போக்கி நீ...