தாய்
தாய்


கருவறையில் இடம் தந்து....
முந்நூறு நாட்கள் எனை சுமந்து...
வாந்தியிலும்... மயக்கத்திலும்....
உண்ணாமல்.... உறங்காமல் தவம் கிடந்து.....
உன் ஊனை உருக்கி என் உடல் தந்து...
ஆயிரம் கற்பனைகளை மனதில் வளர்த்து....
உன் கருவறையை கூடாரமாக்கி....
உன் இரத்தத்தை பாலாக்கி.....
கரத்தை தொட்டிலாக்கி.....
மடியை கட்டிலாக்கி...
மார்பை மெத்தையாக்கி....
இடுப்பை இருக்கை யாக்கி....
தோளை சிம்மாசனமாக்கி....
முதுகை ஊஞ்சலாக்கி...
உன் சுவாசத்தை என்னில் வைத்து....
உலகிற்கு எனை அறிமுகம் செய்து....
உலகை எனக்கு அறிமுகம் செய்து.....
முகவரி ஒன்றை உருவாக்கி....
உட்கார.... நிற்க...
நடக்க...... ஓட....
ஒளிய.. விளையாட....
பேச..... அழ... சிரிக்க....
எல்லாம் கற்றுத்தந்து
உனை மறந்து.... எனை நினைந்து.....
இரவு பகல் பாராது....
எனை வளர்த்தாய்....
நான் பார்த்த முதல் முகம்
தன்னை வருத்தி எனக்காக வாழும்
ஒரே ஜீவன் நீ!
தாய் என்னும் சுடர்...
அன்பு என்னும் ஒளி தந்து....
என் வாழ்வில் வெளிச்சம் கொடுக்கிறது!
தாயே உனக்கு ஒரு பாயிரம் எழுத எண்ணி...எடுத்தேன் எழுதுகோலை..
நாட்கள் கழிந்தன....
காகிதம் தீர்ந்தன....
மை வற்றிப் போனது....
கரங்கள் சோர்ந்து போனது!
கண்டு கொண்டேன்....
நீ வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்ட முடியாத காவியம்!
இதுவரை கண்டதில்லை
உனக்கு நிகரான ஓவியம்!
இறைவன் என் வாழ்க்கையில் வந்தான்!
என் தாயின் உருவில்!
தாயே உன் பாதக் கமலங்களுக்கு....
என்னையே காணிக்கை தாங்குகிறேன்!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐