STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

பயிர் வளர்ப்போம்

பயிர் வளர்ப்போம்

1 min
312

விவசாயி தோளில் சுமப்பது ஏரை அல்ல...

இந்த பாரை! 

அவன் வளர்ப்பது பயிரை அல்ல....

நம் உயிரை!

அவன் நேசிப்பது பொன்னை அல்ல...

இந்த மண்ணை!  

அவன் கேட்பது தன் உரிமையை!

நாம் பேரம் பேசி...

அவனுக்கு பாரத்தை கொடுக்க வேண்டாம்!

எத்தனை சாயத் தொழில்கள்

 மண்ணில் செழித்தாலும்... 

விவசாயத் தொழில் செழித்தால் தான் 

நாடு தழைக்கும்!

இந்த மக்கள் பிழைக்கும்!

ஒருகால் இதை உணராவிடில்...

ஒருக்காலும் மண் தழைக்காது...!

மனித உயிர்கள் பிழைக்காது!

ஏரை நாடு....

ஏறும் நாடு!

உருவாக்கிடு அவனுக்கு வசதி!

அவன் கண்டதில்லை அசதி!

கண்டிட்டால் உலகின் நிலைமை 

அதோ கதி!  

உழவனை மதி! 

ஒழித்திடு சதி...!

பயிர் வளர்ப்போம்! உயிர் வளர்ப்போம்!

விவசாயம் காப்போம்! நம் காயம் வளர்ப்போம்!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational