STORYMIRROR

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

3  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

புத்தாண்டில் வாழ்வு...!

புத்தாண்டில் வாழ்வு...!

1 min
151

அதிசயங்களை

எதிர்பார்த்து 

ஏமாந்த மனது!


இனியும் நடக்குமென

எதிர்பார்ப்பு

உள்ளிருந்தும்

நம்பாத மனதின் ஒருதுளி!


மகிழ்ந்திருக்க

அதிசயங்கள் தேவையில்லை

உணர்ந்து ஒரு குரலின்

ஒலி உள்ளிருந்து!


பயணப் பாதைகளில்

விதைத்ததை விட

அறுவடை அளவை

எண்ணிப் பார்க்கிறேன்!


எனது கோப்பை நிறைந்து

வழியும் தேநீரை

அருந்தி அகம்மகிழ

மனம் பழக்குகிறேன்!


மகிழப் பணம் தேவையில்லை

மனம் உணர்கிறது!


அருகில் அமர்ந்துண்ண

அன்புடன் ஆட்கள் போதும்!


கோப்பையில் தேநீர் வழிய

அன்பு மட்டும் போதும்!


அகம் உணர்கிறது!

ஆண்டவா நன்றி!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract