STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

புரட்சி செய்திடுவோம்

புரட்சி செய்திடுவோம்

1 min
223

மாசி வந்தா ஏ.சி யை தேடுது

பங்குனி வந்தா அங்கமெல்லாம் எரியுது

சித்திரை வந்தா நித்திரை தொலையுது

வெயிலொரு யாகம் நடத்துது

தென்றலும் தீயாய் தீண்டுது

கால நேரமில்லாம வெக்கையாக்கி கருக்குது

நெய்யா தேகத்த உருக்குது

மழையும் மண்ணில் வீழ மறுக்குது

மனுஷங்க நம்ம வெறுக்குது

உஸ்... உஸ்... ன்னு சொல்லிக்கிட்டே

மனித இனம்...

வண்டிய வேகமா உருட்டுது

பஸ்ஸில் ஏக்கமா பறக்குது

கோடை வெயில் கொளுத்துது

வெப்பம் நாளும் கூடுது

தட்பம் தேடி ஓடுது

கூட்டிப் பெருக்க சோம்பியே..

குப்பை யள்ள நாணியே... 

ஏ.சி. போட்டோம் வீட்டுக்கு....

"குட்பை" சொன்னோம் மரத்துக்கு!

கரண்ட் பில்லு எகிறுது.....

பில்லை கண்டு பதறுது...

ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு...

அரையடி நிலம் ஒதுக்கல... 

மரம் உன்னை வளர்க்கல....

சருகு உதிர பொறுக்கல!

உன்னை நாங்களும் மதிக்கல... 

இப்போ ஒதுங்க இடம் கிடைக்கல!

எத்தனை ஏ.சி யை மாட்டினாலும்....

உன்னைப் போல குளுமை யை தந்திடுமா?

மண்ணுக்கு வளமையை சேர்த்திடுமா?

இந்த அறிவு மனிதனுக்கு எட்டிடுமா? 

மண்ணெல்லாம் மரம் செடி நட்டிடுமா? 


மரம் நடுவோம்!... மரமே நாடுவோம்! 

மண்ணுக்கு குளுமை சேர்த்திடுவோம்!

மண்ணுக்கு வளமை கூட்டிடுவோம்!

மண்ணில் புரட்சி செய்திடுவோம்!

மண்ணின் வறட்சி நீக்கிடுவோம்!

வெயில் போக்க கையில் மரக்கன்றை ஏந்திடுவோம்! 

மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும்! 

நல்ல சேவைகள் நாட்டில் தொடரட்டும்!

மண்ணில் மரங்கள் பற்றி வளரட்டும்!

வருங்காலம் வையத்தில் வாழட்டும் !

வாயாற நம்மை வாழ்த்தட்டும்! 

🏕🏝🏡🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳


  



  

  

 

 

 

 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational