புண்பட்ட உலகம் புகைபோட்டு ஆத்த
புண்பட்ட உலகம் புகைபோட்டு ஆத்த


யதார்த்தமாய்
ஒரு தேடல் ......!!!
உலகம் எங்கே
போகுது .....!
மண்ணும் சுவாசிக்க
முடியாமல் தவிக்குது ....!
மரமும் சுவாசிக்க
முடியாமல் நிற்கிறது....!
மனிதனும் சுவாசிக்க
முடியாமல் திரிகிறான்....!
தென்றலும் சுவாசிக்க
முடியாமல் திணறுகிறது....!
மாசு நிறைந்த மனசு
மாசு நிறைந்த உறவு
மாசு நிறைந்த மலர்
மாசு நிறைந்த காற்று
மா
சு நிறைந்த மேகம்
மாசு நிறைந்த உலகம்
புண் பட்ட மனது புகை போட்டு ஆத்தும் - அதுபோல்
புண் பட்ட உலகை புகை போட்டு ஆத்த முனைந்தால்
மண்ணில் வாழும் உயிர்கள் எல்லாம்
மண்ணின் உள்ளே தான் செல்ல நேரும்
புரியா மனிதன் புண் பட்டு
புரியா வண்ணம் புகை போடுகிறான்
வளர்ச்சி என்ற பெயரில்
செய்யும் தவறை தன் போர்வையில்
மறைக்கிறான்
காரணம் தருகிறான் .......!!!