படைவீரன்
படைவீரன்
படைவீரனே....
படைவீரர்கள் எவராயினும்....
ஏன் இராஜா..... இராணியே ஆனாலும் தன் உயிருக்கு ஆபத்து எனில் முன் வைத்த காலை பின் வாங்கி விடுவர்!
நெஞ்சுரம் கொண்ட நீயோ புறமுதுகிட்டு ஓடாமல்....
எதிர்த்து வருபவர் எவராயினும் போரிட்டு வென்றிடுவாய்...!
நிலை மாறிடின் மாண்டிடுவாய்!
குறுக்கு வழியை வெறுத்து நேர் வழியில் போரிடும் நெறியாளன்!
உன்னுள் உயிர் இருக்கும் வரை....
இராஜா ராணியையும் ...
மற்ற படைகளையும்...
எதிரிகள் தீண்டவிடாது காப்பவன் நீ!
எந்தச் சூழலிலும் அவசரம் கொள்ளாமல்..... ஒவ்வொரு அடியாய்.... பார்த்து வைத்து பக்குவமாய் முன்னேறுபவன் நீ!
தன்னலமற்ற தனயன்!
நீ ஒரு இராஜதந்திரி! வாழ்க உன் படைத்திறன்!
வாழ்க உன் கொடைத்திறன்!