போர் வீரர்களே!
போர் வீரர்களே!
விடுப்பை எண்ணியதில்லை
வியர்வையில் குளித்த போதிலும்
கடமை என்றதோடு விட்டுவிடவில்லை
கருணையும் உடன் கலந்திருந்தது
முகம் தெரியா உயிருக்கும்
முகம் காண மறுக்கும்
நேரங்களிலும் துணையிருப்பது
அந்த நெஞ்சங்களே
தங்கள் உறவுகளை வீட்டில் விட்டுவிட்டு
பெயர் அறியா சகோதரனின் குடும்பத்தை காக்க முன்வரும்
தெய்வ பிரதிநிதிகளே
கண்டிபிலும் அன்பினை காட்டும்
பாரத தாயின் செல்வங்களே
நீங்கள் இல்லையேல்
நாங்கள் இன்று இல்லையே...
