STORYMIRROR

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Classics Inspirational

4  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Classics Inspirational

ஒரு த‌மிழனின் கனவில்.. பெருந்தமிழ்நாடு...

ஒரு த‌மிழனின் கனவில்.. பெருந்தமிழ்நாடு...

1 min
512

தமிழனின் எண்ணத்திலும்

ந‌ம்பிக்கையின் விழிகளிலும்

எழுகின்ற எதிர்பார்ப்பில்.. 

வருங்காலத்து த‌மிழனின் 

பெருந்தமிழ்நாட்டின் எல்லை 

இமயம் வரையிலும் நீண்டு

இந்திய எல்லையை தழுவிடும்..


அனைத்து மொழி பேசும்

மொத்த இந்திய உறவுகளும் 

தமிழின் பழமையின் சிறப்பையும் 

உயரிய இலக்கியப் பெருமையையும்

ஒருசேர உணர்ந்து, தமிழை 

அன்போடு வீட்டுக்குள்

அழைத்து வரவேற்று உபசரித்து

தமிழ்மொழியை ஆர்வமுடன் கற்று

தம்மொழியுடன், வீட்டிலும் வெளியிலும் 

தமிழிலும் தயக்கமின்றி பேசியும் 

தவறின்றி எழுதியும் பெருமைகொள்ள‌

தமிழ்மொழி இல்லாத இடமே

இந்தியாவில் இல்லையென்றாகி

இந்தியாவே பெருந்தமிழ் நாடாகும்


தமிழன்னை ஆளும் பெருந்தமிழ்நாட்டை 

வங்கக்கடலும், அரபிக்கடலும்

அலைகளால் தாலாட்டும்...

பெருந்தமிழ‌ன்னையின் பாதத்தை 

இந்தியப்பெருங்கடல் பணிந்து

பெருமையோடு தாங்கி நிற்கும்..


அன்புத்தமிழன்னை, அனைத்து

மொழிகளுக்கும் அன்புத்தாயாகி 

அனைத்து குழந்தைகளையும் அன்போடு

அரவணத்து ஒரே குடும்பமாக்கி

புதியதோர் வழியமைப்பாள்..


தமிழும் தமிழனும் புதுத்தமிழ்

உற‌வுகளோடு கரங்களை கோர்த்து

தலை நிமிர்ந்து நிற்கும் வேளையில்..

இன்றைய இந்தியர்கள் அனைவரும் 

தமிழ்பேசி தமிழர்களாகி தங்களையும்

பெருந்தமிழ்நாட்டின் தமிழர்களென்று 

கூறுவதில் மிக்கவே பெருமைகொள்வர்..


தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து

ஏழரை கோடியில்லை என்றாகி

தமிழிந்தியர்களின் பெருகிய‌

எண்ணிக்கை இருபது மடங்காகும்

பெருந்தமிழ்நாட்டின் ஆட்சி மொழி 

தமிழாக வேண்டுமென்று கருநாடும் 

ஐந்தாறு ஓடும் நாடும் முன்மொழிந்திட‌

குசநாடும், நடுநாடும், வடநாடும்

ஓருசேர ஒரே குரலில் வ‌ழிமொழியும்..


இந்தியும் சமஸ்கிருதமும் தமிழுக்கு

சாமரம் வீசி தமிழின் பெருமை பேசும்..

பெருந்தமிழ்நாட்டின் மாற்றம் கண்டு

உலகநாடுகள் வியப்புடன் நோக்கி நிற்க‌

அண்டை நாடுகளை கிலி அடிக்கும்...


இரா.பெரியசாமி...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract