ஒளியாக....
ஒளியாக....
1 min
230
வானில் ஒளிரும்
வெண்ணிலவின் ஒளியாக
வாழ்வின் உச்சத்தில் நீ
என்னுடன் இணைந்தாய்
கண்களில் திரண்டிடும்
கண்ணீர்த் துளிகளுடன்
காவியமாய் கலந்தாய்
உன்னுயிரின் பிம்பமாய்
எனக்குள் ஊடுருவிடும்
இனிய பொழுதுகளுக்கு
உச்சி நிலாவின் கதிர்களில்
செய்திகள் பல நூறு வாசித்திடும்
காதல் வாசகியாய் நான்
போதுமா உனக்கு
இது இப்போது!