நிதர்சனம்
நிதர்சனம்
உலகில் ஏதுமறியாது
அழுகையை துணைக்கொண்டு
மண்ணில் பாதம் பதித்தோம் !
வாழும் வாழ்வதுவும் நிரந்தரமில்லை !
மரணிக்கும் நொடியெதுவென்றே
அறிதற்கு வழியுமில்லை !
இடைப்பட்ட வாழ்நாளில்
இன்பத்தைக் கொடுத்து
பழி பாவம் விடுத்து
இனிதே வாழ்ந்திடுவோம் !
மண்ணுக்கு இரையாகி -
எலும்புகளாய் கிடப்போமோ ?
அன்றி - நெருப்பில் பொசுங்கி
பிடி சாம்பலாய் காற்றில் கரைவோமோ ?
நிலையில்லா உலகில்
நிதர்சனமான அன்பை
முடிந்தவரை பரப்பிடுவோம் !
அன்பால் எந்நாளும்
உயிர்ப்புடன் இருப்போம் !