நிலமும் நீரும்
நிலமும் நீரும்
நிலமும் நீருமே
நம் வாழ்வின்
ஆதாரமே !
வாழ்வாதாரத்தை அழித்தாலே
வாழ்வும் தான் ஏது நமக்கிங்கே ?
மண்ணும் மலடாக
நீரும் நஞ்சாக
நாளை - உண்ணும் உணவிற்கே
போர் மூளும் நிலையும் தான்
வந்திடுமோ ? - இனியும்
தாமதித்தால்
நம் வாழ்வும் தான்
நிலைத்திடுமோ ?
