நீயே வேணும்!
நீயே வேணும்!
கண்கள் காணும் வரம்!
யாரும் கேட்கா ஸ்வரம்!
பாதி உலகம்!
நெற்றியின் திலகம்!
என் கனவை ஆள்கிறாய்!
என் கனவில் வாழ்கிறாய்!
வேர் நீ!
வேறு நான்!
காதல் கொஞ்சும் கைகள்!
கிடைக்குமா சில நேரங்கள்!
தாரம் என நீ கூப்பிட,
உன் பார்வை என்னை சாப்பிட!
எங்கோ மயங்குகிறேன்!
ஏனோ தயங்குகிறேன்!
வேண்டாம் என்று நெஞ்சம் சொன்னாலும்,
என்னை கொன்னாலும்
நீயே போதும்!

