STORYMIRROR

Deepa Sridharan

Abstract Drama Romance

4  

Deepa Sridharan

Abstract Drama Romance

நீர்க்குமிழிகள்

நீர்க்குமிழிகள்

1 min
331

எனக்கும் எனக்குமான

சிறு இடைவெளியதில்

அந்நிய தேசம் ஒன்று

அன்புடையீர் வாரீரென்று


வந்தனர் சிலர் அன்பு விதைக்க

மற்றவர் சிலர் களையாய் முளைத்தர்

அன்புமில்லை பொய்யுமில்லை நீ

ஏனோ அங்கு வந்து விட்டாய்

காதல் கொள்ள நேரமில்லை

என்று கட்டித்தழுவி நகர்ந்துவிட்டாய்


பிரசவித்தவளின் ஐம்புலன்களும்

சுரக்கும் காம்புதான்

உனை யோசிக்கையில்

என் வெறுப்பும் காதல்தான்


கடிவாளக் குதிரையாய்

ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அன்பில்லா தேசத்திற்கு


நானோ அமாவாசையிலும்

நிலாக் குளிக்கிறேன்

நீ விட்டுச் சென்ற

தனி மொட்டை மாடியில்


பூவரசம் பூவிற்குள்

மருதாணி வைத்துச்

சென்றது யார்?

உள்ளுக்குள் நாணியே

சருகாகின்றது!


என் உலகம் வந்து பார்

சமுத்திரத்தில் மூழ்கித்

தவிக்கும் மலை போல

முட்ட முட்டக் காதல்!


புரியவில்லையா இல்லை

தேவையில்லையா அன்பு உனக்கு

வேரூண்றாமலே பழுக்க நினைக்கிறாய்

நான் உன்னை விதைத்ததை மறுத்து


இருவேறு நீர்க்குமிழிக்குள்

நம் நாடகங்கள்

உடையாமலே கதை சொன்னால்

ஏது சங்கமங்கள்?


சில கண்ணீர் துளிகள் சிந்தி

உன் முகம் அழித்து நகர்ந்தேன்

ஏதோ ஒரு சாமத்தில்

நினைவுப் பேய்கள் துரத்த

திரும்பி வந்து பார்த்த போது

ஆங்கே உறைந்து கிடந்தது

நான் சிந்திய கண்ணீர் துளிகள்

உன் சாயலில்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract