நெருப்பின் ஒளியினில்
நெருப்பின் ஒளியினில்
கனன்று எரியும் நெருப்பின்
ஜுவாலையின் ஒளியினில்
சட்டென்று மறையும்
இந்த மனித பிறப்பின்
கடைசி மிச்சங்கள்
வாழ்வின் இறுதி
நேர போராட்டங்கள்
முகத்தின் சுருக்கங்களில்
தெளிவாய் பிரதிபலிக்க
நான் கண்டுகொண்டேன்
எதுவும் நிரந்தரமில்லை
உன் மனதின் உணர்வுகள்
மட்டுமே கடந்து செல்லும் !
இதுவும் சென்று மறையும்
எங்கோ எதிலோ
மறுபிறப்பினில்
தேடாத ஒன்றினை தேடியே
