STORYMIRROR

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

3  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

நெறி

நெறி

1 min
173

கண்ணிமைக்கும் நேரத்தில்

 கனவுகள் பலவந்து

எண்ணமதைச் சீர்குலைக்க

 ஏதுவாக மனமிருந்தால்

புண்படாதோ வாழ்வு?

 புரிந்திருந்தால் நலம்விழையும்!

வண்ணம்பல விருந்தாலும்

 வெள்ளைதானே நல்லவுள்ளம்?


உடலினுள்ளே உறைகின்ற

 உண்மைதானே ஆண்டவன்?

கடமைதனில் தெரிகின்ற

 கீர்த்தியன்றோ கடவுளவன்?

மடமைவெல் மதிநுட்பம்

 மங்கிடாது செயலாற்றின்

இடரெல்லாம் தெறித்தோடி

 இன்பங்கள் விளையாதோ?



Rate this content
Log in

Similar tamil poem from Abstract