நெறி தவறாதே!!
நெறி தவறாதே!!
பூனைக்கும் யானைக்கும்
மட்டும் தான் காலம்
வருமா என்ன??
மனிதன் தன் நிலையில்
இருந்து தவறினால்
அவனை காக்கும்
நாயும் நெறிகள் வகுக்குமே
பூமியில் உயிர்கள்
அனைத்தும் சமமே
மீறினால் துரத்தி துரத்தி
நீதி கேட்கும்
நன்றியை நன்கு
உணர்ந்த ஜீவன்கள்
என்றும் மறவாதே மனிதா
நீ வாழ பிற உயிரினை
துன்புறுத்தாதே!!
