நேரமில்லை எனக்கு!
நேரமில்லை எனக்கு!
வறண்ட உணர்வுகளின்
மிதமான தாக்கத்தினால்
கனவுகள் கலைத்த
இரவு தூக்கமாய் நீ!
சட்டென்று சரிந்திடும்
மேம்பாலத்தினில்
தறிகெட்டு ஓடும்
வாகனமாய் என் நினைவுகள்!
காற்றினில் பரந்து
நெஞ்சினை அடைக்கும்
நஞ்சு கலந்த
காலை நேரக் காற்றாய்
என் வாழ்வினில் நுழைந்தாய்!
இன்று அத்தனையும்
இழந்து தனிமையில்
தவிக்கும் நிலையினைத்
தந்தாய் எனக்கு நீ!
மழை நீரின் தொடுதலில்
சிலிர்க்க மறந்து -
உணர்வுகள் மரத்து
வாழும் தண்டனையை நீ
ஏன் எனக்குத் தந்தாய்!