நாம் பேசிய பொழுது
நாம் பேசிய பொழுது
நாம் முதலில் பேசிய பொழுது,
மனதில் முளைத்த சிறகுகள்,
ஜாலங்கள் செய்திட வானூர்தி பயணம் சென்றன,
இரவின் அமைதியில்,
இயற்கையின் வாசத்தில்,
இருவரும் கைகொர்க்க,
இனிமை சேர்க்கும் உமது பேச்சு,
இன்றே இன்னிசை பாடல்களாக,
ஒலிக்க தொடங்கியது எமது இதயத்தில்,
நாம் முதலில் பேசிய அந்த நாள்,
எம் மனதை நான் அறிந்த நாள்.

