மதிப்பெண்
மதிப்பெண்
உன் மதிப்பைக் காட்டும் எண்!
சமூகத்தில் உன் மதிப்பைக் கூட்டும் எண்!
சோதனையைத் தாண்டி
நீ பட்ட வேதனையைத் தாண்டி
உன் சாதனையை காட்டும் எண்!
மதிப்பெண் மட்டுமே
எதிர்காலத்தை தீர்மானித்தால்
எடிசனும் ஐன்ஸ்டீனும்?
உன் திறமையை மதிப்பெண்ணோ
பள்ளியோ தீர்மானிக்குமானால்
சச்சின் ?
சாதிக்கத் துடிப்பவனுக்கு
மதிப்பெண் வெறும் எண்!
இதை நீ மனதில் எண்!
நம்பிக்கைக் கொள்! தளராதே!
மனம் அலறாதே!
யானைக்கும் அடி சறுக்கும் மறவாதே!
முயற்சியை ஒரு நாளும் தவறாதே!
மனம் உடைந்து வேதனையில் சாயாதே!
மரணத்தை நாடாதே!
ஓடு ! ஓடு!
உன் இலட்சியம் எட்டும் வரை ஓடு !
நல்ல பாதை ஒன்றையே தேடு!
முயற்சி ஒன்றையே நாடு!
வாழ்வில் மதி பெண்ணை!
(தாயை தாரத்தை)
அவர்கள் உயர்த்துவர் உன்னை!
மதிப்பெண் வெறும் எண்!
அதை தாண்டி பல வழி உண்டு எண்!
