STORYMIRROR

Uma Subramanian

Inspirational

3  

Uma Subramanian

Inspirational

மற்றோர் வாய்ப்பு

மற்றோர் வாய்ப்பு

1 min
142

அறிமுகமில்லா இடம்


அறியாத முகம்தெரியாத பாடம்புரியாத புது இடம்திக் திக்கென்று மனம் பதறியதுதடதடவென்று கால் ஆடியதுவியர்வைக் குளியல் வழலைக்கட்டியின் வாசத்தை மறைத்ததுஉடுத்தியிருந்த என் சட்டையை நனைத்ததுஆசிரியர் பார்வைமழலைக்குட்டி என் சுவாசத்தை நிறுத்தியது!எத்தனை எத்தனை நாட்கள் பதட்டம் பயம்பணிவு மரியாதை தப்பு செய்தால் அடிங்கஅடங்கலன்னா தோலை உரிங்ககண்ணை மட்டும் விடுங்கபெற்றோரின் கூற்றுங்க!


அன்று தெரியவில்லை அந்த பேச்சுக்கள் நல்வழிப்படுத்தும் திருவாசகம் என்று !அன்று புரியவில்லைஆசிரியர் கையிலிருந்த கோல்நம்மை பதப்படுத்தும் சம்மட்டி என்று!அன்று அறியவில்லை நாம் இருந்த இடம்புனிதமான கோயில் என்று!இதோ இந்த நாற்றைவகுப்பறையிலே நடவு செய்து கல்வி என்னும் உரம் போட்டு பக்குவமாய் அறிவு நீர் பாய்ச்சி பாசம் என்னும் வேலியமைத்துசமுதாயம் பயனுற நல்ல வித்திட்ட விவசாயிகள் என் ஆசிரியர்கள்!கருவறை கல்லறை மட்டுமல்ல !கல்வியறையிலேயும்... மற்றொரு வாய்ப்பு கிட்டாது!படிக்கும் போதே பயன்படுத்துவோம்படித்து பயனடைவோம்!ஆசிரியரை மேன்மைபடுத்துவோம்!சமூகத்தை மேம்படுத்துவோம்!மாதா பிதா குரு தெய்வம் என்பதை மனதில் கொள்வோம்! 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational