மரப்பெண்
மரப்பெண்
1 min
209
என்னை நட்டு
மண்ணைக் காத்த
பெற்றோர் தொட்டிச் செடியாக
கற்றோர் வீட்டில்
நல்ல விலைகொண்ட
நாயாய் ஒருநாள் அடைக்கலமாக்கப்பட்டேன்!
நடப்பட்ட ஈராண்டு இடைவெளியில்
தோட்டத்து வண்ணப்பூ மலர்களாய்
மதலைப் பழங்களை
ஈன்றெடுத்த போதிலும்
பணப்பெட்டி ஆக்சிஜன்
பற்றாக்குறையால் விதைப்பந்து
சேமிப்புகளை மறந்ததால்
பழங்களைக் கவனிக்க
மறந்தமையால் நேரான வாழ்வு
இல்லாமையால் அழுகத்
தொடங்கிய இளைய சமுதாயத்தின்
நிலை கண்டு
வான் மகளிடம் கையேந்த
இலவசக் கல்வி வாயு பகவான்
தரமான தாய்மொழிக்கல்வி
மழையினை கொட்டியதில்
மதலைப் பழங்களின் அழுகல்
நோய் மாறியதே!