மரங்களின் ஆனந்தம்
மரங்களின் ஆனந்தம்
சீறிப் பாயும் வாகனங்கள்
மலிந்தே தான் போயினவே....
மரங்கள் தம்மையே
மூச்சு முட்டச் செய்திடும்
கார்பன் மோனாக்சைடும்
பென்சீனும் சற்றே
காற்றில் குறைந்திடவே
மூச்சுத் திணறல் இல்லாமல்
நிம்மதியாகவே தான்
சுழலும் காற்றோடும்
பாடும் பட்சிகளோடுமே
அளவளாவியபடியே
ஆனந்தமாய் ஆடுகின்றனவே
மரங்களே !