மலர்களை மனிதர்கள் வேறுபாடு உணர்ந்து பிடிக்கும் என்பார்கள்!
மலர்களுக்கு மனிதர்களை வேறுபாடு காணத் தெரியாது!
மலர்களின் குணத்தினை ஒத்தவர்கள் மனிதர்களே!
மலர்களைப் போல மனிதர்கள் சிரிப்பார்கள் மகிழ்ச்சியிலே!
மலர்களைப் போல மனிதர்கள் வாடுவார்கள் துக்கத்திலே!
மலர்களின் அழகினைப் புகழ்ந்து கவிதைகளைப் பாடுவது
மனிதர்களே!
மலர்களின் வாசம் மனிதர்களின் இதயத்தினை ஒளிரச் செய்யும்!
மலர்கள் மனிதனின் மனதினை மகிழ்ச்சியாக்கும்!
மலர்களின்றி அமையாது உலகு!
மலர்கள் மூலமே உலகிற்கு மகரந்த சேர்க்கை ஏற்படுகிறது!
மலர்களில் மனிதர்களைப் போன்ற ஏற்றத் தாழ்வு இல்லை!
மலர்கள் அனைத்தும் ஒரு வகையில் அழகானவையே!